டுபாய் நாட்டுக்கு கடத்தவிருந்த 32 கிலோ நிறையுடைய வல்லப்பட்டைகளுடன் நபரொருவர்  கைது செய்யப்பட்டுள்ளதாக விமானநிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவரிடமிருந்து 96 இலட்சம் ரூபா பெறுமதியான வல்லப்பட்டைகளை சுங்க அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் 37 வயதுடைய கம்பஹா, படல்கம பகுதியைச் சேர்ந்தவராவார்.

சந்தேகநபரிடமிருந்து வல்லப்பட்டைகளை பறிமுதல் செய்து அரச உடைமையாக்கிய சுங்க அதிகாரிகள், ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதித்து விடுதலை செய்துள்ளனர்.