கொழும்பு புறக்­கோட்டை பகு­தியில் உப­யோ­கித்த தேங்காய் எண்­ணெயை மீள்­நி­ரப்பி விற்­பனை செய்த மொத்த விற்­பனை நிலையம் நுகர்வோர் பாது­காப்பு அதி­கார சபை அதி­கா­ரி­களால் சுற்­றி­வ­ளைக்­கப்­பட்­டது.

விற்­ப­னைக்­காக வைக்­கப்­பட்­டி­ருந்த உப­யோ­கித்த தேங்காய் எண்ணெய் அடைக்­கப்­பட்­டி­ருந்த 100 பெரல்­க­ளையும் இர­சா­யனப் பொருட்­களை அடைக்கும் 25 கொள்­க­லன்­களில் நிரப்­பப்­ப­ட­வி­ருந்த தேங்காய் எண்ணெய் பெரல்­க­ளையும் நுகர்வோர் பாது­காப்பு அதி­கார சபை அதி­கா­ரிகள்  இதன்­போது கைப்­பற்­றினர். 

தகவல் ஒன்றின் அடிப்­ப­டையில் அந்­தப்­பி­ர­தே­சத்தை சுற்­றி­வ­ளைத்த அதி­கா­ர­சபை அதி­கா­ரிகள் தேடுதல் நட­வ­டிக்­கையின் பின்னர், இந்த சட்­ட­வி­ரோத வியா­பார நட­வ­டிக்­கையை கண்­டு­பி­டித்­தனர்.

இது குறித்து சுற்­றி­வ­ளைப்பில் ஈடு­பட்ட அதி­கா­ரிகள் தெரி­வித்­ததா­வது, 

உப­யோ­கப்­ப­டுத்­திய தேங்காய் எண்ணெய், நுகர்­வோரின் பாவ­னைக்கு வழங்­காமல், வேறு பாவ­னைக்கே விற்­கப்­ப­டு­வ­தாக வர்த்­தக நிலை­யத்தின் உரி­மை­யாளர் எம்­மிடம் தெரி­வித்த போதும் அதற்­கான எந்த ஆதா­ரங்­க­ளையும் சமர்ப்­பிக்­க­வில்லை.

அத்­துடன் மனித பாவ­னைக்கு தடை­செய்­யப்­பட்ட இர­சா­யனப் பதார்த் தங்களை அடைக்கும் கொள்கலன்களில் தேங்காய் எண்ணெயை நிரப்புவதற்கு தயார்நிலையில் இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது என்றனர்.