பிர­பா­க­ரனின் மரணம் வேத­னை­ய­ளித்­தது : ராகுல் காந்தி உருக்கம்

Published By: Robert

11 Oct, 2017 | 12:14 PM
image

தமி­ழீழ விடு­தலை புலி­களின் தலைவர் பிர­பா­க­ரனின் சட­லத்தை பார்த்து நானும் எனது சகோ­தரி பிரி­யங்­காவும் வேத­னை­ய­டைந்தோம் என காங்­கிரஸ் துணைத்­த­லைவர் ராகுல் காந்தி தெரி­வித்­துள்ளார்.

காங்­கிரஸ் கட்­சியின் துணை தலைவர் ராகுல் காந்தி குஜ­ராத்தில் சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்­டுள்ளார்.

குஜ­ராத்தின் வதோ­த­ராவில் நேற்­று­முன்­தினம் தொழில் அதி­பர்­க­ளுடன் அவர் கலந்­து­ரை­யா­டினார். அதில் பங்­கேற்­ற­வர்கள் ராகுல் காந்­தி­யிடம் சில கேள்­வி­களை முன்­வைத்­தனர். அதன்­போது விடு­த­லைப்­பு­லிகள் தலைவர் பிர­பா­கரன் கொல்­லப்­பட்­டமை குறித்து கேள்வி எழுப்­பப்­பட்­டது, இதற்கு பதி­ல­ளித்த ராகுல் காந்தி 

என் தந்­தையை கொலை செய்­தவர் என்­றாலும் பிர­பா­கரன் மர­ணித்த போது கவ­லை­ய­டைந்தேன். அவ­ரது உடலைப் பார்த்து மிகவும் வேதனை அடைந்தேன். பிர­பா­கரன் மரணம் குறித்து சகோ­தரி பிரி­யங்­கா­வி­டமும் கூறினேன். அவரும் என்னைப் போலவே வேத­னை­யான மன­நி­லையில் தான் இருந்தார். 

பிர­பா­க­ரனின் சட­லத்தை பார்த்து நானும் எனது சகோ­தரி பிரி­யங்­காவும் மிகவும் வேத­னை­ய­டைந்தோம். பிர­பா­க­ரனின் குடும்­பத்­தினர் கொல்­லப்­பட்­டதால் துய­ர­ம­டைந்தேன். மற்­ற­வர்­களின் துய­ரங்­களில் பங்­கு­கொள்­வ­துதான் காந்தி குடும்­பத்தின் பாரம்­ப­ரியம் என்றார். 

 முன்னாள் பிர­தமர் ராஜீவ்­காந்தி கடந்த 1991 ஆம் ஆண்டு ஸ்ரீபெ­ரும்­பு­தூரில் அர­சியல் பொதுக்­கூட்­டத்­திற்கு வந்த போது படு­கொலை செய்­யப்­பட்டார். இந்த படு­கொ­லைக்கு விடு­தலைப் புலிகள் அமைப்பு தான் காரணம் என்று சொல்­லப்­பட்­டது. சிறையில் தண்­டனை பெற்று வரும் நளி­னி­யையும் சந்­தித்து பிரி­யங்கா ஏன் என் தந்­தையைக் கொன்­றீர்கள் என்று உருக்கமாக கேட்டிருந்தார். இந்நிலையில் மீண்டும் பிரபாகரன் மரணம் குறித்து ராகுல் காந்தி மனம் உருகி பதில் அளித்திருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17