முள்ளந்தண்டுவடம் பாதிப்பு மற்றும் மாற்றுத் திறனாளிகளின் அமைப்பின் ஒரு வருட பூர்த்தி விழா இன்று (10) செவ்வாய்க்கிழமை மிகச்சிறப்பாக நடைபெற்றது.

அமைப்பின் தலைவர் ஜெகதீசனின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பிரதம விருந்தினராக வடமாகாண சமூக சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் திருமதி வனஜா செல்வரட்ணம் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

சிறப்பு விருந்தினர்களாக வண.பிதா ஜோன் கிறிஸ்ரி அடிகளார், சிரேஷ்ட சட்டத்தரணி அன்ரன் புனித நாயகம், மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன், கஜானன், சம்பத் வங்கி பிரதி முகாமையாளர் ஜனனன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்வில் ஓராண்டு இதழும் வெளியிடப்பட்டது. பல்வேறு கலை நிகழ்வுகளும் பரிசில் வழங்கும் வைபவங்களும் இடம்பெற்றன.

வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் இதில் பங்குபற்றினர்.