நடிகராக வலம் வரும் உதயநிதி, முன்னணி நடிகராக உயரவேண்டும் என்ற எண்ணம் கொண்டவராக இருக்கிறார். ஆனால் அவரால் ஒரு கொமர்ஷல் ஹிட் படங்களைக் கூட கொடுக்க முடியவில்லை. தற்போது அவர் முன்னணி நடிகராக உயர்ந்திருக்கும் சிவகார்த்திகேயனின் உதவியை கேட்டிருக்கிறார். அவரும் இதற்கு சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

இந்த வாரம் வெளியாகவிருக்கும் உதயநிதி நடித்த இப்படை வெல்லும் என்ற படத்தின் ஓடியோ வெளியீட்டு விழாவில் பங்குபற்றி, அப்படத்தில் ஓடியோ மற்றும் முன்னோட்டத்தை வெளியிட சிவகார்த்திகேயன் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன்,சூரி, ராதிகா சரத்குமார், ஆர். கே. சுரேஷ், டேனியல் பாலாஜி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். மதன் கார்க்கி, அருண்ராஜா காமராஜ் ஆகியோர் எழுதிய பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார் ஸ்லிம் கிங்  டி. இமான்.

இந்த படம் உதயநிதியின் திரைவாழ்வில் திருப்புமுனையை உண்டாக்கும் என்று நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார் படத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் கௌரவ் நாராயணன். இதனை லைகா நிறுவனம் தயாரித்து வெளியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல் : சென்னை அலுவலகம்