வெற்றிபெறப்போவது யார் ? தீர்மானிக்கும் இறுதிநாள் இன்று 

Published By: Priyatharshan

10 Oct, 2017 | 11:41 AM
image

பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் எந்த அணி வெற்றிபெறவுள்ளதென தீர்மானிக்கும் 5 ஆவதும் இறுதியுமான நாள் இன்றாகும்.

இரு அணிகளுக்குமிடையிலான இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2 ஆவது போட்டி டுபாயில் இடம்பெற்று வருகின்றது.

முதலாவது போட்டியில் இலங்கை அணி 21 ஓட்டங்களால் வெற்றிபெற்று 1-0 என முன்னிலைபெற்றிருந்தது.

இந்நிலையில், இரு அணிகளுக்குமிடையிலான 2 ஆவதும் இறுதியுமான போட்டி டுபாயில் இடம்பெற்று வருகின்றது.

இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான இரண்­டா­வது டெஸ்ட் போட்­டி­யிலும் இலங்கை அணி வெற்­றி­பெ­று­வ­தற்­கான வாய்ப்பு பிர­கா­ச­மா­கி­யுள்­ளது.

317 ஓட்­டங்­கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்­பெ­டுத்­தா­டி­வரும் பாகிஸ்தான் அணி நேற்­றைய ஆட்டநாள் முடிவில், 198 ஓட்டங்களைப்பெற்று ஐந்து விக்­கெட்­டுக்­களை இழந்து போட்டியில் வெற்றிபெறுவதா, தோல்லியைத் தழுவுவதா என்ற இக்கட்டான நிலையில் உள்ளது.

இன்­றைய நாள் மட்­டுமே மீத­முள்ள நிலையில் இப் போட்­டியில் பாகிஸ்தான் அணி வெற்­றி­பெற்று தொடரை சமப்­ப­டுத்­துமா அல்­லது இலங்கை அணி வெற்­றி­பெற்று தொடரைக் கைப்­பற்­றுமா என பலத்த எதிர்­பார்ப்பு எழுந்­துள்­ளது.

பாகிஸ்தான் அணி வெற்றிபெறவேண்டுமாயின் 5 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 119 ஓட்டங்களைப்பெறவேண்டும். 

இலங்கை அணிவெற்றிபெற வேண்டுமாயின் 119 ஓட்டங்களுக்குள் மிகுதி 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றவேண்டும்.

பாகிஸ்தான் அணி சார்பாக ஆடுகளத்தில் சப்ராஸ் 57 ஓட்டங்களுடனும்  சௌபிக் 86 ஓட்டங்களுடனும் ஆடுகளத்திலுள்ளனர்.

இலங்கை – பாகிஸ்தான் அணி­க­ளுக்­கி­டை­யி­லான இரண்­டா­வது டெஸ்ட் போட்டி பக­லி­ரவு டெஸ்ட் போட்­டி­யாக டுபாயில் இடம்பெற்று வரு­கி­றது.

இந்தப் போட்­டியில் முதலில் துடுப்­பெ­டுத்­தா­டிய இலங்கை அணி முதல் இன்­னிங்ஸில் 482 ஓட்­டங்­களைக் குவித்­தது.

அதனைத் தொடர்ந்து தனது முதல் இன்­னிங்ஸை ஆரம்­பித்த பாகிஸ்தான் அணி இலங்­கையின் சிறப்­பான பந்து வீச்சை தாக்­குப்­பி­டிக்க முடி­யாமல் 262 ஓட்­டங்­க­ளுக்கு சுருண்­டது. 

அசார் அலி (59), ஹாரிஸ் சொஹைல் (56) அதி­க­பட்­ச­மாக ஓட்டங்களை சேர்த்­தனர். 

இலங்கை அணி தரப்பில் டில்­ருவன் பெரேரா, ஹேரத் தலா 3 விக்­கெட்­டுக்­க­ளையும், லக்மால் மற்றும் கமகே தலா 2 விக்­கெட்­டுக்­களையும் வீழ்த்­தி­னார்கள்.

முதல் இன்­னிங்ஸில் 220 ஓட்­டங்கள் முன்­னிலை பெற்ற இலங்கை அணி 2ஆவது இன்­னிங்ஸை தொடங்­கி­யது. ஆனால் பாகிஸ்­தானின் அபார பந்­து­வீச் சில் இலங்கை அணி திண­றி­யது. 

திமுத் (7), சில்வா (3), சதீர (13), லக்மால் (1), சந்­திமால் (0) ஆகியோர் சொற்ப ஓட்­டங்­க­ளுடன் ஆட்­ட­மி­ழக்க போட்­டியின் மூன்றாம் நாள் ஆட்ட நேர நிறைவில் இலங்கை அணி 5 விக்­கெட்­டுக்­களை இழந்து 34 ஓட்­டங்­களை எடுத்­தி­ருந்­தது. 

அதனைத் தொடர்ந்து நேற்று ஆரம்­ப­மான நான்­கா­வது நாளில் இலங்கை அணி அடுத்­த­டுத்து விக்­கெட்­டுக்­களை இழந்து 96 ஓட்­டங்­க­ளுக்கு சுருண்­டது. 

ஆனாலும் பாகிஸ்தானை விட 317 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ள இலங்கை நம்பிக்கையுடன் இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீச களமிறங்கியது.

அதன்­படி நேற்­றைய நாளில் ஆடு­களம் நல்ல பதத்தில் பந்து வீச்­சா­ளர்­க­ளுக்கு சுழலும் விதத்தில் மாறி­விட்­டதால் டில்­ரு­வானின் பந்­து­வீச்சை எதிர்­கொள்ள பாகிஸ்தான் வீரர்கள் திண­றினர். அதன் ­கா­ரண­மாக மசூட், சொஹைல், பாபர் ஆசாம் என பாகிஸ்தான் அணியின் முக்­கிய துடுப்­பாட்ட வீரர்­களை அவர் வீழ்த்த, மறு­மு­னையில் பிரதீப் மற்றும் கமகே ஆகியோர் ஒவ்­வொரு விக்­கெட்­டுக்­களை சாய்க்க நேற்­றைய 4 ஆம் நாள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் அணி 198 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

இந்தப் போட்­டி­யிலும் இலங்கை அணிக்கே வெற்­றி­ வாய்ப்பு பல­மாக உள்­ளது. இந்தப் போட்­டியில் இலங்கை அணி வெற்­றி­பெறும் பட்­சத்தில் இரண்டு வர­லாற்று சாத­னை­களை நிலை­நாட்டும்.

முத­லா­வது இலங்­கையின் முத­லா­வது பக­லி­ரவு டெஸ்ட்டில் வெற்றி என்­பதும், பாகிஸ்­தானின் இரண்டாவது தாய­கமான ஐக்­கிய அரபு எமி­ரேட்ஸில் பாகிஸ்தானை டெஸ்ட் தொடரில் வீழ்த்திய முதல் அணி என்பதுமாகும்.

பெறுத்திருந்து பார்ப்போம் இலங்கை அணியின் வெற்றிக் கனவை பாகிஸ்தான் அணி தகர்த்து தொடரை சமப்படுத்துமா அல்லது இலங்கை அணி வெற்றிபெற்று சாதனைகளை நிலை நாட்டுமாவென.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35