இந்திய கலாச்சார மையம் பிரபல ஹிந்துஸ்தானி வயலின் வித்துவான் கலாநிதி சோமசிறி இலேசிங்க மற்றும் அவரின் சீடர்கள் பங்குபற்றும் வயலின் இசைக்கச்சேரி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

குறித்த இசை நிகழ்ச்சியானது கொழும்பு 7 இல் அமைந்துள்ள இந்திய கலாச்சார மையத்தின் கேட்போர் கூடத்தில் எதிர் வரும் 20 ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.

இவ் இசை நிகழ்ச்சி தொடர்பான மேலதிக தகவல்களை தெரிந்து கொள்ள 2684698 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி தெரிந்து கொள்ள முடியும் அல்லது  iccrcolombo@gmail.com.  என்ற மின் அஞ்சல் ஊடாகவும் பெற்றுக்கொள்ளலாம்.