யாழ். கர்ப்பிணிப்பெண் படுகொலை தொடர்பில் சி.சி­.ரி.வி. காணொ­ளியின் அறிக்கை

Published By: Robert

10 Oct, 2017 | 10:58 AM
image

யாழ்ப்­பாணம் ஊர்­கா­வற்­றுறைப் பகு­தியில் கொடூ­ர­மாக கொலை செய்­யப்­பட்ட கர்ப்­பிணிப் பெண் படு­கொலை வழக்கில் பரி­சோ­த­னை­க­ளுக்­காக அனுப்­பப்­பட்ட சி.சி­.ரி.வி. காணொ­ளியின் அறிக்கை ஊர்­கா­வற்­றுறை நீதிவான் நீதி­மன்றில் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. அத்­துடன் குறித்த வழக்­கினை குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரி­வுக்கு மாற்­று­மாறு இரண்டு தரப்­புக்­க­ளாலும் முன்­வைக்­கப்­பட்ட கோரிக்கை சட்­டமா அதி­பரின்  சுற்று நிரு­பத்­திற்கு அமைய மன்­றினால் நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. 

Image result for நீதிவான் நீதி­மன்றில்

கடந்த ஜன­வரி மாதம் ஊர்­கா­வற்­றுறை கரம்பொன் பிர­தே­சத்தில் வீட்டில் தனித்­தி­ருந்த 7 மாத கர்ப்­பிணிப் பெண்­ணொ­ருவர் கொடூ­ர­மான முறையில் இனந்­தெ­ரி­யா­தோரால் கொலை செய்­யப்­பட்­டி­ருந்தார். 

இச் சம்­பவம் தொடர்­பாக விரைந்து செயற்­பட்ட ஊர்­கா­வற்­றுறை பொலிஸார் சந்­தே­கத்தின் அடிப்­ப­டையில் இரு­வரை கைது செய்­த­துடன் அவர்­க­ளுக்கு எதி­ரான வழக்கு விசா­ர­ணை­யா­னது ஊர்­கா­வற்­றுறை நீதிவான் நீதி­மன்றில் இடம்­பெற்று வரு­கின்­றது. 

இந்­நி­லையில் நேற்­றைய தினமும் குறித்த வழக்­கா­னது ஊர்­கா­வற்­றுறை நீதிவான் நீதி­மன்ற நீதிவான் ஏ.எம்.எம். றியாழ் முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு எடுத்துக் கொள்­ளப்­பட்­ட­போது,

குறித்த சம்­பவம் தொடர்பில் சந்­தேக நபர்கள் சம்­பவம் நடந்த நேரத்தில் சம்­பவம் நடந்த இடத்தில் நிற்­க­வில்லை எனவும் அவர்கள் வேறொரு இடத்தில் நின்­ற­தா­கவும் குறிப்­பிட்டு அங்கு நின்­ற­தற்­கான ஆதா­ர­மாக சி.சி.ரி.வி. காணொளி ஒன்று இருப்­ப­தாக அவர்கள் தரப்பு சட்­டத்­த­ர­ணியால் மன்­றிற்கு குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது. அவ்­வாறு குறிப்­பி­டப்­பட்ட அக்­கா­ணொ­ளியைப் பெற்று அதனை ஆய்­விற்கு உட்­ப­டுத்­து­மாறு மன்று இட்ட கட்­ட­ளைக்­கேற்ப மொறட்­டுவை பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு அனுப்­பப்­பட்ட அக்­கா­ணொ­ளியில் ஆய்­வ­றிக்கை நேற்­றைய தினம் மன்­றிற்கு சமர்ப்­பிக்­கப்­பட்­டது. 

அக்­கா­ணொ­ளி­யா­னது முரண்­பா­டுகள் அற்ற உண்மைக் காணொளி எனவும் அவ்­வ­றிக்­கையில் கூறப்­பட்­டி­ருந்­தது. 

மேலும் மன்றில் சந்­தேக நபர்கள் சார்­பா­கவும் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் சார்­பா­கவும் முன்­னி­லை­யான சட்­டத்­த­ர­ணிகள் இவ்­வ­ழக்கின் விசா­ர­ணையை குற்றப் புல­னாய்வுப் பிரி­விற்கு மாற்­று­மாறு கோரி­யி­ருந்­தனர். 

எனினும் இவ்­வ­ழக்கை அவ்­வாறு குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரி­விற்கு மாற்­ற­மு­டி­யா­தென நீதிவான் தெரி­வித்தார். 

அதா­வது சட்­டமா அதி­ப­ரது சுற்று நிரு­பத்­தின்­படி ஒரு குற்றச் சம்­ப­வ­மா­னது பல்­வேறு பகு­தி­க­ளுடன் தொடர்­பு­பட்­ட­தாக இருந்தால் மாத்­தி­ரமே அவ்­வி­சா­ர­ணையை குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு மாற்­ற­மு­டி­யு­மெ­னவும் மாறாக ஒரு குற்றச் சம்­பவம் ஒரு பகு­தி­யுடன் தொடர்­பு­பட்­டி­ருந்தால் அவ்­வி­சா­ர­ணையை குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரி­விற்கு மாற்­ற­மு­டி­யா­தென அச்­சுற்று நிரு­பத்தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தாக நீதிவான் குறிப்­பிட்டு அவர்­க­ளது கோரிக்­கையை நிரா­க­ரித்­தி­ருந்தார். 

அத்­துடன் இவ்­வ­ழக்கின் விசா­ர­ணையை வேண்­டு­மானால் ஊர்­கா­வற்றுறை பொலி­ஸா­ரி­ட­மி­ருந்து யாழ். மாவட்­டத்தின் ஏனைய ஏதா­வ­தொரு பொலிஸ் பிரி­விற்கு மாற்­ற­மு­டி­யு­மென நீதவான் குறிப்­பிட்டார். எனினும் அது வழக்கின் விசா­ர­ணையை மேலும் தாம­தப்­ப­டுத்தும் எனக் குறிப்­பிட்டு இரு தரப்பு சட்டத்தரணிகளும் இவ்வழக்கின் விசாரணையை வழமைபோன்று ஊர்காவற்றுறை பொலிஸாரே மேற்கொள்ள சம்மதம் தெரிவித்தார்கள். 

இதனைத்தொடர்ந்து குறித்த வழக்கு விசாரணையை எதிர்வரும் 23ஆம் திகதிவரை ஒத்திவைத்ததுடன் அதுவரை இவ்விரு சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் உத்தரவிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:25:16
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 11:50:02
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08