வத்தளை, கடலில் நீராடச் சென்ற இருவர் நேற்று மாலை கடலில் மூழ்கி பலியாகியுள்ளதாக  பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

வத்தளை பிரீத்திபுர பகுதியிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு பலியாகியவர்கள் இருவரும்  லிந்துலை மற்றும் தலவாக்கலை  பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இருவரும், சில நபர்களுடன் கடலில் நீராடச் சென்ற போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள், ராகம வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.