உண்ணாவிரதப்போராட்டத்தால் கைதிகளின் உடல் நிலை மோசம் : அனு­ரா­த­புரம் வைத்­தி­ய­சா­லைக்கு மாற்றம்

Published By: Robert

10 Oct, 2017 | 11:09 AM
image

அனு­ரா­த­பு­ரத்­திற்கு மாற்­றப்­பட்­டுள்ள தமது வழக்­குகள் வவு­னி­யா­வி­லேயே விசா­ரணை செய்­யப்­பட வேண்டும் எனக் கோரி கடந்த இரண்டு வாரங்­க­ளாக உண்­ணா­வி­ரதப் போராட்டம் நடத்தி வரு­கின்ற 3 தமிழ் அரசியல் கைதி­களும் அனு­ரா­த­புரம் அரச பொதுவைத்திய­சா­லைக்கு மாற்­றப்­பட்­டுள்­ளனர். 

தொடர்ச்­சி­யாக உணவை ஒறுத்து போராட் டம் நடத்தி வந்த இவர்கள் கடந்த இரண்டு தினங்­க­ளாக நீர் அருந்­தவும், சிறைச்­சாலை வைத்­தி­ய­சா­லையில் உடல் தேறு­வ­தற்­காக வழங்­கப்­பட்ட மருந்தை ஏற்­கவும் மறுத்­தி­ருந்த நிலையில் அவர்­க­ளு­டைய உடல் நிலை மோச­மாகப் பாதிக்­கப்­பட்­டி­ருந்­த­தா­கவும், இத­னை­ய­டுத்தே அவர்கள் அனு­ரா­த­புரம் அரச பொது வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­றப்­பட்­டுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. 

இவர்­க­ளுக்கு அனு­ரா­த­புரம் சிறைச்­சாலை வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை அளித்து வந்த வைத்­தியர் இவர்­க­ளு­டைய உடல் நிலை குறித்து கவலை வெளி­யிட்­ட­தை­ய­டுத்து, ஞாயிறு இரவு இவர்கள் மூவரும் அனு­ரா­த­புரம் பொது வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­றப்­பட்­டுள்­ளனர். அங்கு அவர்­க­ளுக்கு தற்­போது சிகிச்சை அளிக்­கப்­பட்டு வரு­வ­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. 

பயங்­க­ர­வாதத் தடைச்­சட்­டத்தின் கீழ் கைது செய்­யப்­பட்டு சுமார் 8 வரு­டங்­க­ளாகத் தடுப்பில் உள்ள இரா­ச­துரை திரு­வருள், மதி­ய­ழகன் சுலக்ஷன், கணேசன் தர்சன் ஆகிய மூன்று அரசியல் கைதிகளுமே இவ்வாறு உறுதியாகவும் கடுமையாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர் என்பது குறி;ப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08