ஹோட்டல் Riu ஸ்ரீ லங்காவில் வெவ்வேறு சுவை உணவுகளை அனுபவியுங்கள்

Published By: Priyatharshan

09 Oct, 2017 | 03:57 PM
image

24 மணி நேர ஐந்து நட்சத்திர சகல அம்சங்களையும் கொண்ட Riu ஸ்ரீ லங்கா ஹோட்டல், வெவ்வேறு நாடுகளில் பல்வேறு உணவு வகைகளை தயாரித்து வழங்குகிறது.

இதில் உள்நாட்டு சமையல் வகைகள் மிகவும் புகழ்பெற்றுத்திகழ்கின்றன. ஹோட்டலில் இரு பிரதான உணவகங்கள் காணப்படுகின்றன. ரிட்டி பன்ன மற்றும் சிலோன் ஆகியன அவையாகும். 

மேலும் மூன்று தொனிப்பொருள்களுடனான உணவகங்களும் காணப்படுகின்றன. பிரதான உணவகத்தினூடாக, பெருமளவு தெரிவுகளுடனான புஃவே பரிமாறப்படுவதுடன், இதில் இலங்கை மற்றும் ஆசியா முதல் இத்தாலி மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் உணவுகளும் பரிமாறப்படுகின்றன. 

ஹோட்டலின் ஆசிய உணவகமான காவோரி அல்லது இத்தாலிய உணவகமான ஃபோர்செட்டா ஆகிய ஏதேனும் ஒரு பகுதியில் விருந்தினர்கள் தமது இரவு உணவை அருந்தலாம்.

சகல நாடுகளையும் சேர்ந்த விருந்தினர்கள், குறிப்பாக உள்நாட்டவர்கள் பரந்த உணவுகளை ரசித்து உண்கின்றனர். மூன்று உணவு வேளைகளின் போதும்ரூபவ் ஆகக்குறைந்தது எட்டு உள்நாட்டு உணவு வகைகளை சுரை ஸ்ரீ லங்கா பரிமாறும். இதில் வாழைப்பூ வதக்கல், மரவள்ளி பால் கறி, மஞ்சள் மீன் குழம்பு, பொறித்த மிளகாயுடன் கணவாய் மற்றும் கங்குங், மஞ்சள், சோறு, அவித்த சிவப்பு சோறு, தேங்காய் சம்பல், பொரித்த நெய்ததெலி சம்பல், வல்லாரை சம்பல் உடன் தேங்காய்பூ, பன்றி பால் கறி, இறால் பொறியல், கோழி கறி, தேங்காய் ரொட்டி போன்றன அதிகளவு விரும்பப்படுகின்றன.

சுரை ஸ்ரீ லங்காவின் உணவு மீதான ஈடுபாடு மற்றும் நாட்டம் ஆகியன அதன் உணவு வகைகளில் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன. நாட்டில் காணப்படும் சிறந்த சமையலறைகளில் ஒன்றாக இரு அமைந்துள்ளதுடன், அதன் பேக்கரி தயாரிப்புகளுக்கு விருந்தினர்கள் அதிகளவு விருப்பம் காண்பிக்கின்றனர். தொடர்ச்சியாக சிறந்த சுவையை கொண்ட தயாரிப்புகளை வழங்குவதுடன், சிற்றுண்டிகளிலும் இது வெளிப்படுத்தப்படுகிறது.

நிறைவேற்று சமையல் நிபுணரான ஆரித பெர்னான்டோ துறையில் காணப்படும் புகழ்பெற்ற சமையல் நிபுணர்களில் ஒருவராக திகழ்கிறார். உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் இவர் பெருமளவு அனுபவத்தை பெற்றுள்ளார். 

சர்வதேச தரங்களுக்கமைய, உணவு தயாரிப்பதில் இவர் மாபெரும் அனுபவத்தைக் கொண்டுள்ளார். வாடிக்கையாளர்களின் சிக்கலான உணவு தேவைகள் மற்றும் சக ஊழியர்களை ஊக்குவித்தல் பயிற்சிகளை வழங்கல் போன்றவற்றையும் வழங்கி வருகிறார்.

சமையல் நிபுணர் பெர்னான்டோ தெரிவிக்கையில்,

 “சுரை ஸ்ரீ லங்கா உடன் கடந்து வந்த பயணம் விறுவிறுப்பானதாகவும், மகிழ்ச்சியூட்டுவதாகவும் அமைந்துள்ளது. எமது ரகசியமான சேர்மானங்களான அன்பு மற்றும் ரூடவ்டுபாடு ஆகியவற்றை கொண்டு இனிய, நாவூறும் சுவைகளிலமைந்த உணவு வேளைகளை தயாரித்து வழங்குகிறோம். 

ஊழியர்களுக்கு வலுவூட்டப்பட்டுள்ளதுடன், எமது வழிகாட்டலின் கீழ் புதிய உணவு வகைகளை தயாரிக்க ஊக்குவிக்கப்படுகின்றனர். பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. எமது அனைத்து விருந்தினர்களும் இனிய நினைவுகளுடன் செல்கின்றனர்” என்றார்.

ஹோட்டல் Riu ஸ்ரீ லங்கா ஐந்து நட்சத்திர ஹோட்டல் என்பதுடன், 501 சௌகரியமான அறைகளையும் கண்கவர் பரந்தளவு சுற்றுப்புற கடலின் தோற்றங்களையும் வழங்கும் வகையில் அமைந்துள்ளது. இரு பிரதான மற்றும் மூன்று தொனிப்பொருளுடன் கூடிய உணவகப்பகுதிகளைக் கொண்டுள்ளதுடன் வரையறைகளற்ற உள்நாட்டு மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட பானங்களை வழங்கும் மூன்று பார்கள், டிஸ்கோதெக் கரோகே, சிறுவர்கள் மற்றும் வயது வந்தவர்களுக்கான வெவ்வேறு களிப்பூட்டும் நிகழ்ச்சிகள், மூன்று பாரிய நீச்சல் தடாகங்கள் மற்றும் சிறுவர் நீச்சல் தடாகம் மற்றும் விளையாட்டு பகுதிகள், நீர் விளையாட்டுக்கள், ஸ்டீம் அல்லது வேர்ள்பூல் குளியல் பகுதி, ஜக்குஸி, பல சாதனங்களை கொண்ட ஜிம், ஐந்து நட்சத்திர சர்வதேச ஸ்பா தொடரான ரெனோவா ஸ்பா மற்றும் பல வெகுமதிகள் விருந்தினர்களுக்கு 24 மணி நேரமும் பரிபூரண அனுபவத்தை பெற்றுக்கொள்ள உதவியாக அமைந்திருக்கும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58