ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு புறக்கோட்டை லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்.

அரசாங்க ஓய்வூதியர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாகவே குறித்த வீதி தற்போது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதனால் குறித்த வீதியைப் பயன்படுத்துவோர் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு போக்குவரத்துப் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.