விமா­னப்­ப­டைக்கு நவீ­ன­ரக விமா­னங்­களை கொள்­வ­னவு செய்ய அனு­மதி கோரப்­பட்­டுள்­ளது.!

Published By: Robert

09 Oct, 2017 | 10:02 AM
image

இலங்கை விமா­னப்­ப­டைக்கு புதி­தாக நவீ­ன­ரக விமா­னங்­களை கொள்­வ­னவு செய்ய அமைச்­ச­ர­வையின்  அனு­மதி கோரப்­பட்­டுள்­ளது. எனினும் புதிய விமா­னங்­களை வாங்க விமா­னப்­படை விசேட கோரிக்­கை­களை முன்­வைக்­க­வில்லை என விமா­னப்­படை தெரி­வித்­துள்­ளது. 

இலங்கை விமா­னப்­ப­டைக்கு புதி­தாக 18 விமா­னங்­களை கொள்­வ­னவு செய்ய தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ள­தாக குறிப்­பி­டப்­பட்­டுள்ள நிலையில் இது குறித்து விமா­னப்­படை ஊட­கப்­பேச்­சாளர் கிஹான் சென­வி­ரத்­ன­விடம் வின­விய போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார். அவர் மேலும் கூறு­கையில், 

இலங்கை விமா­னப்­படை வரு­டாந்தம் தமது விமா­னங்கள் தொடர்­பி­லான அறிக்­கை­யினை பாது­காப்பு அமைச்­சிற்கு சமர்ப்­பிப்­பது வழ­மை­யான ஒன்­றாகும். பழைய விமா­னங்­களை திருத்­தவும் தேவைப்­படும் பட்­சத்தில் புதிய விமா­னங்­களை வாங்­கவும் நாம் எமது தரப்பில் அறிக்கை வழங்­குவோம். எனினும் அவ­ச­ர­மாக 18 விமா­னங்­களை கொள்­வ­னவு செய்­ய­வேண்டும் என விமா­னப்­படை ஒரு­போதும் தெரி­விக்­க­வில்லை. அதற்­கான அவ­சியம் இப்­போது இல்லை. பழு­த­டைந்­துள்ள சில விமா­னங்­களை திருத்த வேண்டும் என்ற கோரிக்கை உள்­ளது. அதேபோல் பழைய விமா­னங்­களை புதுப்­பிக்க வேண்டும். அதற்­கான தேவைகள் உள்­ளன. 

 அமைச்­ச­ர­வையில் இந்த விவ­காரம் தொடர்பில் கலந்­து­ரை­யா­டப்­பட்­டுள்­ள­தாக அறிய முடி­கின்­றது. எனினும் உறு­தி­யாக எம்மால் இந்த விட­யத்தில் எத­னையும் குறிப்­பிட முடி­யாது. அதேபோல் 18 புதிய விமா­னங்­களை கொள்­வ­னவு செய்ய அர­சங்கம் தீர்­மானம் எடுத்­துள்­ள­தாக உத்­தி­யோ­க­பூர்­வ­மாக இது­வ­ரையில் எமக்கு எந்த தக­வல்­க­ளையும் அனுப்­ப­வில்லை. தவ­றான கருத்­துக்­களை ஊட­கங்­களில் அவ­தா­னிக்க முடி­கின்­றது. 

அதேபோல் குறிப்­பிட்ட சில நாடு­களின் பெயர்­களை சுட்­டிக்­காட்டி அந்த நாடு­களில் இருந்து விமா­னங்­களை கொள்­வ­னவு செய்­யவும் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கின்­றது. அதிலும் இன்னும் உறு­தி­யான தீர்­மானம் இல்லை. எமக்கு அனு­மதி கிடைக்கும் பட்­சத்தில் கேள்வி கோர­லுக்கு விடப்­பட்டு அதன் மூல­மா­கவே தீர்­மா­னிக்­கப்­படும் எனவும் அவர் குறிப்­பிட்டார். 

இந்­நி­லையில் இலங்­கையின் தேசிய  பாது­காப்பு நிலை­மை­களின் அடிப்­ப­டையில்   கடல்சார் கண்­கா­ணிப்பை மேற்­கொள்­வ­

தற்­கான விமா­னங்கள் தற்­போது இலங்கை  விமா­னப்­ப­டைக்குத் தேவைப்­ப­டு­கி­ற­தா­கவும் அதற்­கா­கவே புதிய ரக 18 விமா­னங்­களை கொள்­வ­னவு செய்ய இலங்கை அர­சா

ங்கம் தீர்­மா­னித்­துள்­ள­தா­கவும் சில சர்­வ­தேச ஊட­கங்கள் மற்றும் இலங்­கையின் ஊட­கங்கள் கருத்­துக்­களை வெளியிட்டுள்ளன. 

இலங்கை விமானப்படைக்கு அமெரிக்கா,  சீனா, பிரித்தானியா, ரஷ்யா, உக்ரேன் ஆகிய நாடுகளிடம் இருந்து விமானங்கள் கொள்

வனவு செய்யப்பட்டன. தற்போது கேள்விப்

பத்திரங்களுக்கு  அமைய சில நாடுகள்

விமானங்களை வழங்க முன்வந்துள்ளதா கவும்  தெரியவருகின்றது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37