உலக தபால் தினம் இன்று உல­க­ளா­விய ரீதியில் கொண்­டா­டப்­பட்டு வரு­கின்­றது. இந்த சேவை­யா­னது சர்­வ­தேச ரீதியில் மக்­களின் இணை­ப்புப் பாலமாக அமைந்­துள்­ளது. ஒருவ­ருக்­கொ­ருவர் தங்­க­ளது இன்­ப­துன்­பங்­க­ளையும்  சுக­துக்­கங்­க­ளையும் பரி­மாறும் சேவையாகவும் இது அமைந்­துள்­ளது      

நவீன தொடர்பு சாத­னங்கள் எவ்வள­வுதான்   உரு­வா­னாலும் தாங்கள் கைப்­பட எழு­திய விட­யங்­களை சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் படித்து உணர்­வதில் உண்­டாகும் மன உணர்­வுகள் நேரில் நின்று கூறு­வது போன்ற உணர்­வினை உண்­டாக்கும் என்­பதில் எள்­ள­ளவும் ஐய­மில்லை

ஆரம்ப காலத்தில் மனித இனத்தின் தொடர்­பாடல் என்­பது அயலில் உள்­ளவர்­களை அழைப்­ப­தற்கு கூ என கூக்­க­ர­லிட்டும் பின்னர் பரந்து விரிந்த தொடர்­பு­களை ஏற்­ப­டுத்த முர­ச­றைந்தும், புறாக்­களை தூது விட்டும் அடி­மைகள் மூல­மா­கவும் மேற்­கொண்­டனர். கால­மாற்­றத்தின் விளைவாக குதிரை வண்­டிகள் மூல­மா­கவும் இந்த சேவைகள் மேற்­கொள்­ளப்­பட்­டன 

இவ்­வாறு தகவல் தொடர்பில் உரு­வான முன்­னேற்­ற­க­ர­மான செயற்­பா­டு­களின் விளை­வாக தபால் சேவை ஆரம்­ப­மா­கி­யது. இந்த நிலையின் ஒரு கட்­ட­மாக சுவிற்­சர்­லாந்தின் பேர்ண் நகரில் தபால் சங்­கத்­தினர் உலக தபால் தினம் என்ற எண்ணக் கரு­வினை உரு­வாக்­கினர். இதனைத் தொடர்ந்து மேற்­கொள்­ளப்­பட்ட செயற்­பா­டு­களின் விளைவாக உலக தபால் தினம் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது

இதற்­கான பிர­க­ட­னத்தில் மக்கள் அவர்­க­ளுக்­கு­ரிய பெறு­மதி வாய்ந்த தகவல்­க­ளையும் பொருட்­க­ளையும் எம்­மிடம் ஒப்­ப­டைக்­கின்­றனர். அவற்றைப் பாது­காத்து மிகுந்த கவ­னத்­துடன் முடிந்­தவரை அவர்கள் குறிப்­பி­டு­வோ­ரிடம்  ஒப்­ப­டைப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகளை மிக விரைவா­கவும் நேர்­மை­யா­கவும்  அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­படுத்துவோம் என குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

டச்­சுக்­கா­ரரின் ஆட்சிக் காலத்தில் இலங்­கையின் கரை­யோர மாகா­ணங்­களில் 5 தபால் நிலை­யங்கள் ஆரம்­பிக்­கப்­பட்­டன. இவை பல்கிப் பெருகி அபிவி­ருத்தி அடைந்த நிலையில்  தற்­போது 653 தபால் நிலை­யங்கள், 3410 உப தபால் நிலை­யங்கள், ஏனைய தரத்­தி­லான தபால் நிலை­யங்கள் என வளர்ச்சி அடைந்த நிலையில் தற்­போது  4692 தபால் நிலை­யங்கள் வரை உள்­ளன.

ஆரம்ப கால­கட்­டத்தில் தபால் நிலை­யங்கள் மக்­களின் தபால்­களை சேக­ரித்து அவற்றை மக்­க­ளுக்கு விநி­யோ­கிக்கும் பணி­க­ளையே மேற்­கொண்­டி­ருந்­தன காலப்­போக்கில் அவற்றின் செயற்­பா­டு­க­ளில் பாரிய மாற்­ற­ங்கள் ஏற்­பட்­டுள்­ளன.குறிப்­பாக நகரப் பகு­தி­களில் உள்ள தபா­ல­கங்­க­ளிலும் ஏனைய தபா­ல­கங்­க­ளிலும் சாதா­ரண தபால் விநி­யோகம், சர்­வ­தேச தபால் சேவைகள் பரி­மாற்றம், பணப்­ப­ரி­மாற்றம், மின்­சாரம், குடிநீர் சிட்­டை­க­ளுக்­கான பணத்­தினைப் பெற்றுக் கொள்­ளுதல், வங்கிச் சேவை, பரீட்­சை­க­ளுக்­கான கட்­ட­ணங்­களை ஏற்றுக் கொள்­ளுதல், காப்­பு­றுதி, நீதி­மன்ற தண்டப் பணங்­களைப் பெறுதல் போன்ற பல்வேறு பணி­க­ளையும் மேற்­கொண்டு வருகின்­றன. 

இந்த வகையில் தபால் திணைக்களத்தின் வளர்ச்சிப் பரிமாணம் பெருமளவில் அதிகரித்திருப்பதை அவதானிக்க முடிகின்றது. எதிர்காலத்தில் இந்த திணைக்களம் நவீன சாதனங்கள் மற்றும் உபகரணங்களின் உதவியுடன் மக்க­ளுக்கான பயனுள்ள பல சேவைகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கலாம்.