பஸ் வண்டியொன்று பள்ளத்தில் பாய்ந்து விபத்திற்குள்ளானதில் இருவர் பலியான நிலையில் 20 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ் விபத்து தெல்தெனிய - திகன பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தனியார் பஸ் வண்டியொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் விபத்து தொடர்பில் தாம் விகாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.