122 இரட்­டை­யர்­களை கொண்­டுள்ள உக்­ரே­னிய கிரா­ம­மொன்று உலகில் அதி­க­ளவு இரட்­டை­யர்­களைக் கொண்ட பிராந்­தி­ய­மென்ற புதிய சாத­னையை படைத்­துள்­ளது. தென் மேற்கு உக்­ரேனின் ஸ்கர்­பற்­றியா ஒப்லாஸ்ட் பிராந்­தி­யத்தில் 4,000 பேரை மட்­டுமே சனத்­தொ­கை­யாகக் கொண்ட வெலி­கயா கொபன்யா என்ற மேற்­படி கிராமம் ஏற்­க­னவே 61 இரட்­டை­யர்­களை உள்­ள­டக்கி கின்னஸ் உலக சாதனைப் புத்­த­கத்தில் இடம்­பி­டித்­தி­ருந்­தது.

தற்­போது அந்தத் தொகை இரு மடங்­காகி தன்னால் நிறை­வேற்­றப்­பட்ட முந்­திய சாத­னையை அந்தக் கிராமம் முறி­ய­டித்­துள்­ளது. அந்தக் கிரா­மத்தில் அள­வுக்­க­தி­க­மான இரட்­டை­யர்கள் பிறப்­ப­தற்கு அங்­குள்ள நீரில் காணப்படும் விசேட மருத்துவக் குணமே காரணம் என உள்ளூர்வாசிகள் நம்புகின்றனர்.