ஜீப் ரக வண்டியொன்றும் வேனொன்றும் நேருக்குநேர் மோதி விபத்திற்குள்ளானதில் 3 வயது குழந்தையொன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன் 12 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மத்துகம - கலவான வீதியில் மிதலன பிரதேசத்திலேயே குறித்த விபத்து இன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதன்போது வேனில் பயணித்த 3 வயதுடைய குழந்தையயே உயிரிழந்துள்ளது. மேலும் வேனில் பயணித்த 12 பேர் காயமடைந்து பதுரலிய மற்றும் நாகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.