50 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயின் தொகையை எடுத்துவந்த பெண் ஒருவர் கட்டுநாயக்க சுங்க அதிகாரிகளினால் கைது  செய்யப்பட்டுள்ளார்.

டுபாயில் இருந்து விமானத்தின் மூலம் இலங்கைக்கு வந்த 43 வயதுடைய உகாண்டா நாட்டு பிரஜையே இவ்வாறு கைதுசெய்யப்பட்டவராவார்.

505 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை தனது பயணப்பையில் மறைத்து வைத்துக்கொண்டுவரும் போதே இன்று அதிகாலை 5.20 மணியளவில் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, கைது செய்யப்பட்ட குறித்த பெண், மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் பொதைப்பொருள் ஒழிப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சுங்க ஊடக பேச்சாளர் தர்மசேன கஹந்தவ தெரிவித்தார்.