பழங்கள் ஆரோக்­கி­யத்­திற்கு அவ­சி­ய­மான பல ஊட்­டச்­சத்­து­களைக் கொண்­டுள்­ளதை அறி­வீர்கள். பிர­தா­ன­மாக விற்­றமின் ‘சீ ’ உள்­ளிட்ட பல விற்­ற­மின்­க­ளையும், அன்­ரி­ஒக்­சி­டன்ற்­க­ளையும், கனி­யங்­க­ளையும், நார்ப்­பொ­ருட்­க­ளையும் கொண்­டுள்ள பழங்கள் மனி­தரின் உடல் ஆரோக்­கி­யத்­திற்கு இன்­றி­ய­மை­யா­தவை. இந்த வகையில் எமது நாட்டில் பயி­ரி­டப்­ப­டு­கின்ற அன்­னாசிப் பழமும் முக்­கி­ய­மான ஊட்­டங்­க­ளையும் கொண்­டுள்­ள­துடன் பல நோய்­களைத் தடுக்­கின்­றன.

அன்­னாசிப் பழத்தை பழ­மா­கவோ, பழச்­சா­றா­கவோ, புருட் சலட் ஆகவோ சமைத்தோ உண்ண முடியும். மிகவும் சுவை­யான இந்தப் பழத்தை அனை­வரும் விரும்பி உண்­கின்­றனர். அபூர்­வ­மாக ஒரு சில­ருக்கு ஒவ்­வாமை (Allergy) ஏற்­ப­டு­வ­துண்டு. இவ் ஒவ்­வாமை கார­ண­மாக இதழ், முரசு, நாக்கு என்­பன தடிப்­ப­துடன் வெகு சிலரில் தேக அரிப்பு ஏற்­ப­டலாம். அன்­னாசிப் பழத்தை அதிக நாட்கள் வைத்­தி­ருந்து உண்டால் ஊட்­டங்கள் குறை­வ­டை­யலாம். குளிர்­சா­தனப் பெட்­டியில் 4 – 5 நாட்கள் வரை வைத்து சாப்­பி­டலாம்.

அன்­னாசிப் பழம் புற்று  நோயைத் தடுக்கும்.

இன்று சவா­லாக உள்ள நோய்­களில் புற்று நோய் முக்­கி­ய­மா­னது. அன்­னாசிப் பழம் புற்­றுநோய் ஏற்­ப­டு­வதை தடுப்­பதில் பங்­காற்­று­வதால் எமது நாளாந்த உணவில் அடிக்­கடி இதைச் சேர்த்துக் கொள்­ளலாம். அன்­னா­சிப்­ப­ழத்­தி­லுள்ள விற்­றமின் சீ, புறு­மெ­லயின் (Brome lain) மற்றும் மங்­கனீஸ் (Manganese) என்­பன புற்­றுநோய் ஏற்­ப­டு­வதை தடுக்கும் வல்­லமை கொண்­டவை. குறிப்­பாக குடும்ப பரம்­பரை வர­லாற்றில் புற்­றுநோய் உள்­ள­வர்கள் அன்­னா­சிப்­ப­ழத்தை வாரம் இரண்டு மூன்று தட­வை­யா­வது உண்­பது சிறந்த பலனைத் தரும். கல வளர்ச்­சி­யிலும் தொழிற்­பாட்­டிலும் முக்­கி­ய­மான கொலா­ஜெனை (Collagen) உரு­வாக்­கு­வதில் விற்­றமின் சீ, போலேற் என்­பன தொழிற்­ப­டு­கின்­றன. இது கட்­டுப்­பா­டற்ற கலப்­பி­ரி­கையை தடுத்து புற்­று­நோ­யையும் தடுக்­கின்­றது. அன்­னாசி மாத்­தி­ர­மின்றி வேறு சில பழங்­களும் இவ்­வா­றான அம்­சங்­களைக் கொண்­டி­ருப்­பதால் நாம் தினமும் பழ­வ­கை­களை தவ­றாமல் சாப்­பி­டு­வதன் மூலம் புற்­றுநோய் ஏற்­ப­டு­வதை ஓர­ளவு தவிர்க்க முடியும்.

நீர­ழிவு நோயா­ளர்கள் அன்­னா­சிப்­பழம் சாப்­பி­டலாம்

பொது­வாக பழ­வ­கைகள் இனிப்­பாக இருப்­ப­தனால் நீரி­ழிவு நோயா­ளர்கள் பழங்­களைச் சாப்­பிட பயப்­ப­டு­வார்கள். ஆனால் நீரி­ழிவு நோயா­ளர்கள் மட்­டான அளவில் பழங்­களை கட்­டா­ய­மாகச் சாப்­பி­டு­வதால் பல நன்­மைகள் உள்ளன. குருதிக் குளுக்­கோசின் அளவை பெரும்­பா­லான பழங்கள் சடு­தி­யாக கூட்­டு­வ­தில்லை. பழங்­க­ளி­லுள்ள அத்­தி­யா­வ­சி­ய­மான நுண் ஊட்­டங்கள் நன்மை பயக்கும். குறிப்­பாக அன்­னா­சி­யி­லுள்ள விற்­றமின் B6,B1,B5,போலேற், C என்­பன நீரி­ழிவு நோயா­ளர்­க­ளுக்கு நன்மை பயக்கும். அன்­னாசிப் பழத்தில் நார்ச்­சத்­துகள் நிறைய உள்­ளதால் குருதி வெல்­லத்தை அதி­க­ரிக்கச் செய்­வ­தில்லை. எனவே பயப்­ப­டாமல் நீரி­ழிவு நோயா­ளர்கள் அன்­னாசிப் பழம் சாப்­பி­டலாம்.

அன்­னாசிப் பழத்தின் பல்­வேறு நன்­மைகள்.

அன்­னாசிப் பழம் உடலின் நோயெ­திர்ப்புச் சக்­தியை அதி­க­ரிப்­பதால் பல்­வேறு நோய்­க­ளி­லி­ருந்து காக்­கின்­றது. சக்­தியை வழங்­கு­வதால் உற்­சா­கத்தை அளிக்­கின்­றது. மூட்­டு­க­ளுக்கு பாது­காப்­ப­ளிப்­பதால் மூட்­டு­வாத நோயைத் தடுப்­ப­துடன் எலும்­பு­க­ளுக்கு உறு­தியை வழங்­கு­கின்­றது. பற்­க­ளுக்கும், முர­சுக்கும் உறு­தியை வழங்­கு­வதன் மூலம் வாய்ச்­சு­கா­தா­ரத்தை பேணு­கின்­றது. சளி, தடிமல், இருமல் முத­லா­ன­வற்றை குறைக்­கின்­றது. அன்­னா­சிப்­ப­ழத்­தி­லுள்ள நிறைந்த நார்ச்­சத்து சமி­பாட்டை இல­கு­ப­டுத்­து­வ­துடன் மலச் சிக்­க­லையும் தடுக்கின்றது.

அன்னாசிப்பழத்திலுள்ள தாதுப் பொருளான கொப்பர் (Copper) செங்குருதிக்கலங்களின் உற்பத்தியில் பங்காற்றுகின்றது. பொற்றாசியம் (Potassium) இரத்தக் குழாய்களுக்குள் அழுத்தத்தை குறைப்பதுடன் இரத்தச் சுற்றினை சீராகப் பேணுகின்றது. இதயத்தின் சீரான தொழிற்பாட்டுக்கு உதவுவதுடன் இதய நோய்களிலிருந்து காக்கின்றது. எனவே அன்னாசிப்பழத்தை உங்கள் மெனுவில் சேருங்கள்.