இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக தலைமன்னாருக்குள் பிரவேசித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேருக்கு பிணையில் செல்ல மன்னார் நீதவான் ஏ.ஜீ அலெக்ஸ்ராஜா அனுமதி வழங்கியுள்ளார்.

இவர்களில் கணவன் மனைவி ஆகிய இருவருக்கு 50 ஆயிரம் ரூபாய் சரீர பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து படகு மூலம் தலைமன்னாருக்கு வருகை தந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

வவுனியா – மகாரம்பைக்குளத்தைச் சேர்ந்த துவாறகா கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னார் திருமணம் புரிந்து இந்தியா சென்றிருந்தார்.

இந்தியாவில் தனது கடவுச்சீட்டை தொலைத்த நிலையில், சட்டவிரோதமாக படகு மூலம் தனது கணவர் மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் வெள்ளிக்கிழமை தலைமன்னாரை வந்தடைந்துள்ளனர்.

இந்நிலையில், அவர்களை கடற்படையினர் கைது செய்து தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.