நாட்டில் பதுளை மாவட்­டமே, ஆகக் கூடு­த­லாக மண்­ச­ரிவு அபாயம் ஏற்­ப­டக்­கூ­டிய மாவட்­ட­மாக இருந்து வரு­வ­தாக தேசிய கட்­டிட ஆய்­வகப் பணிப்­பாளர் காமினி ஜய­திஸ்ஸ குறிப்­பிட்டார். 

முன்­னெச்­ச­ரிக்கை ஒத்­திகை வேலைத்­திட்டம் தொடர்­பான நிகழ்வில் கலந்­து­கொண்ட அவர், இது­கு­றித்து மேலும் தெரி­விக்­கையில், 

மண்­ச­ரிவு அபாயம் நிலவும் பகு­தியில் 29,160 குடும்­பங்கள் இருப்­ப­தா­கவும், இக்­கு­டும்­பங்கள் தொடர்பில், கூடிய அக்­கறை செலுத்தி, பாது­காப்­பான இடங்­களில், அவர்­களை குடி­ய­மர்த்த நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வேண்டும்” என்றும் கூறினார். 

பதுளை மாவட்ட செய­லாளர் நிமால் அப­ய­சிரி கருத்து தெரி­விக்­கையில், “பதுளை மாவட்­டத்தில் தற்­போது மழை பெய்ய ஆரம்­பித்­தி­ருப்­பதால், எதிர்­வரும் காலங்­களில் வெள்ளம் மற்றும் மண்­ச­ரி­வுகள் ஏற்­ப­டு­வதைத் தவிர்க்க முடி­யாது. அதற்­கான முன்­னெச்­ச­ரிக்­கையை மக்­க­ளுக்கும் வழங்­கி­யுள்ளோம் என்றார்.

மேலும், உமா ஓய திட்­டத்­தினால், பண்­டா­ர­வளை, திக்­க­ராவை பகு­தி­களில் மண்­ச­ரிவு மற்றும் நிலம் தாழி­றங்கல் போன்­ற­வை­களும் எதிர்­நோக்­கப்­பட்­டுள்­ளன. தேசிய கட்­டிட ஆய்­வ­கமும் இதனை தெளி­வு­ப­டுத்­தி­யுள்­ளது.

இம் முன்­னெச்­ச­ரிக்கை ஒத்­திகை வேலைத்­திட்­டத்தில் பதுளை மாவட்ட செய­லாளர் நிமால் அப­ய­சிரி, தேசிய கட்­டிட ஆய்­வகப் பணிப்­பாளர் காமினி ஜய­திஸ்ஸ, இடம் முகா­மைத்­துவ நிலை­யத்தின் பணிப்­பாளர் நாயகம் டி.எஸ்.எல்.சேனா­தீர, பணிப்­பாளர் சுனில் ஜய­வீர, பதுளை மாவட்ட இடர் முகாமைத்துவ பிரதி பணிப்பாளர் ஈ.எல்.எம்.உதயகுமார உள்ளிட்டு இடர் முகாமைத்துவ அமைச்சின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.