நுண் கடனிலிருந்து பெண்களை காப்பாற்றுங்கள் பெண்கள் அமைப்புக்கள் மத்திய வங்கி ஆளுநரிடம் கோரிக்கை

Published By: Priyatharshan

07 Oct, 2017 | 11:13 PM
image

நுண் கடனிலிருந்து எங்கள் பெண்களை காப்பாற்றுங்கள் என கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்ட பெண்கள் அமைப்பு மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமியிடம்  மன்றாட்டமாக கோரிக்கை விடுத்துள்ளனா்.

இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு வடக்கிற்கு வந்துள்ள மத்திய வங்கியின் ஆளுநர் இன்று கிளிநொச்சியில் மத்திய வங்கியின் பிராந்திய அலுவலகத்தில்  பிரதேச சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளையும், பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடிய  போதே  பெண்கள் அமைப்பினர் இக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.

நுண் கடன் நிறுவனங்கள் இலகுவான முறையில் அதிக வட்டிக்கு நுண் கடன்களை மக்களுக்கு வழங்கி வருகின்றார்கள். குறிப்பாக அதிகமாக பெண்களை இலக்கு வைத்தே இந்த நுண் கடன்கள் வழங்கப்படுகிறது. இதன் பின்னர் கடனை அறவிட வருகின்ற நிதி நிறுவனங்களைச் சேர்ந்த நபர்கள் அநாகரீகமான வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொள்வதோடு அலுவலக நேரங்களுக்கு பின்னரும், சில இடங்களில் இரவு நேரங்களிலும் கடன் அறவீட்டுக்கு வருகின்றார்கள்.

போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் பல்வேறு தேவைகளுடன் வாழ்கின்றனர். வறுமை அதிகமாக காணப்படும் பிரதேசமாகவும்  இந்த மாவட்டங்கள் காணப்படுகிறது. எனவே இங்கு மக்களிடம் இலகுவாக கடன்களை வழங்க கூடிய  சூழ்நிலைகளே காணப்படுகிறது. இதனை தமக்கு சாதகமாக பயன்படுத்தும் நிதி நிறுவனங்கள் மக்களிடம் அதிக வட்டிக்கு  வாரந்த கடன், மாதாந்த கடன் என வழங்கி வருகின்றார்கள் எனவும்  பெண்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினா்.

மேலும் அரச மற்றும் வணிக வங்களில் கடன்களுக்கு காணப்படுகின்ற இறுக்கமான நடைமுறைகளும் நுண்கடன் நிறுவனங்களுக்கு வாய்ப்பாக அமைந்துள்ளது எனவும் மத்திய வங்கியின் ஆளுநருக்கு சுட்டிக்காட்டப்பட்டதோடு, இந்த நுண்கடன் முறைக்கு மத்திய வங்கியும் பொறுப்பேற்க வேண்டும் எனவும் வங்கிகளை கட்டுப்படுத்த வேண்டிய மத்திய வங்கி இவா்களை கட்டுப்படுத்த தவறியது தொடர்பிலும் மத்திய வங்கியின் அளுநரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இது தொடா்பில் கருத்து தெரிவித்த மத்திய  வங்கியின் ஆளுநர் இந்திரஜித்குமாரசுவாமி நிதி நிறுவனங்களின் நுண் கடன் ஒரு கொள்ளை கடன் இது தொடர்பில் அதிக  கவனம் செலுத்தப்படும். தற்போது நாங்கள் மக்கள் அமைப்புகளின் பிரதிநிதகளிடம் எதிர்பார்கின்றோம் இருக்கின்ற கடன் முறைகளை எவ்வாறு  தடை செய்வது, அல்லது குறைப்பது. புதிய கடன்களை எப்படி வழங்குவது, கடன் பற்றி மக்களுக்கு எவ்வாறு வழிப்புணர்வு வழங்குவது என்பது தொடர்பில்  ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம். 

மேலும் கடன்களை நிறுத்திவிட முடியாது. கடன்கள் மூலம் முதலீடுகளை ஏற்படுத்திக்கொள்ள முடியும். ஆனால்  வடக்கு மக்களிடம் அதிகம் கடன்களை வழங்கி அதிக வட்டி பெற்றுக்கொள்ளப்படுகின்ற போதும் அவை வடக்கில் முதலீடு செய்யப்படுவதில்லை எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மன்னாரில் பனங்காட்டுக்குள் பரவிய தீயினால் வீடு...

2024-03-19 09:21:22
news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52
news-image

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய...

2024-03-18 18:20:01
news-image

13 நபர்களால் 14 வயதான சிறுமி...

2024-03-18 18:50:28
news-image

விடுதியொன்றில் கழுத்தறுக்கப்பட்டு காயமடைந்த நிலையில் இருவர்...

2024-03-18 17:09:50
news-image

மொரட்டுவையில் கழுத்தறுக்கப்பட்டு பெண் கொலை!

2024-03-18 16:37:01