"வடக்கிலும், கிழக்கிலும் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதுவும் தெரியாது" என கருணாம்மான் என்றழைக்கப்படும்  தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்தார்.

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி மத்தியகுழு கூட்டம் இன்று காலை மட்டக்களப்பு கல்லடியில் உள்ள கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் இடம்பெற்றதனைத் தொடர்ந்து இடம்பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார் 

விநாயகமூர்த்தி முரளீதரன்  தொடர்ந்து தெரிவிக்கையில், 

"இலங்கையில் வாழ்கின்ற தமிழ்  மக்களுக்காக எமது கட்சி குரல் கொடுத்துக் கொண்டே இருக்கும்,  அது போன்று எமது மக்களின் விடுதலைக்காகவும் ஆணித்தரமாக செயற்படும் என்பதுடன், 20 ஆவது திருத்த சட்டம் தற்ப்பொழுது  பாராளுமனறத்தில் அமுலாக்கப்பட்டு வெளிவந்துள்ளது. இதற்கு  தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களித்துள்ளது ஆனால் எமது கட்சி இதை முற்று முழுதாக எதிர்க்கின்றது.

அந்த அரசியல் சாசனம் எழுதப்பட்ட போது அங்கு தமிழ் நிபுனத்துவம் அற்றவர்களே  பங்குபற்றி உள்ளார்கள்.  தந்தை செல்வா முதல் ஒஸ்லோ தீர்மானம், 13 ஆவது  திருத்த சட்டம் என பல போராட்டங்களை கடந்து கொண்டு இருக்கும் போதே பல உடன்படிக்கைகள்  வந்திருக்கின்றது.

ஆனால் எதிலும் தமிழ் மகளையோ, அல்லது தமிழர்களின் நிலத்தையோ அடகு வைத்தது இல்லை.  பல தொனிப்பொருளில் பேசப்பட்டது தனி நாடு கோரினோம், சமஸ்டியை கோரினோம் வடக்கு கிழக்கு இணைத்த தாயகமாக பேசினோம், அதே போன்று ஒருமித்த இலங்கைக்குள் உள்ளக சுய நிர்ணைய உரிமையை கோரி கூட பேச்சு வார்த்தைகளை நடத்தினோம்.   

இந்த 20 ஆவது சட்டத்தில் ஒரு வசனம் சிங்களத்தில் சேர்க்கபட்டுள்ளது அதற்கு ஆங்கிலத்தில் கூட மொழி பெயர்ப்பு இல்லை இதற்கு சமந்தனும், சட்ட ஆலோசகர் சுமந்திரனும்  சேர்ந்து வாக்களித்துள்ளார்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு மாத்திரம் அல்லாமல் சில முஸ்லிம் கட்சிகளும் வாக்களித்துள்ளது. ஆகவே அவர்கள் சிறு பான்மை இனமாக இருந்து கொண்டு சிறுபான்மை கட்சிகளாக இருந்து கொண்டு இதற்கு  வாக்களித்தமை எமது தலையில் நாமே மண் அள்ளி போட்டது போன்று தமிழ் மக்களை  துன்பத்தில் தள்ளியுள்ளனர்.

இதை தமிழ் மற்றும் முஸ்லிம்  மக்கள் நன்று புரிந்து கொள்ள வேண்டும். இந்த  20 ஆவது திருத்தத்தை வடமாகாண சபை முற்று முழுதாக எதிர்த்துள்ளது. இதை நாங்கள்  வரவேற்கின்றோம் ஏன் என்றால் விக்னேஷ்வரன் ஐயா ஒரு சட்ட வல்லுநர் என்பதால் அதை புரிந்துகொண்டுள்ளார் ஆனால் கிழக்கு மாகாணசபை அதை ஆதரித்துள்ளது இவர்களுக்கு இதனுடைய நன்மை தீமை பற்றி தெரியவில்லை. 

பல சட்ட வல்லுனர்கள் எல்லாம் இருந்தும் இந்த புதிய அரசியல் அமைப்பு பற்றிய சாதக,பாதகம் தெரியாமல் வாக்களிதுள்ளார்கள். உண்மையில் ஹிஸ்புல்லாஹ் வலு கட்டாயமாக  வாக்களிக்க சொன்னார்கள், அதை நான் விரும்பவில்லை என கூறி அதை தூக்கி எரிந்து விட்டு வந்துள்ளார்.  ஆனால் எமது தமிழ் தேசிய கூட்டமைப்பு எமது மக்களை கொண்டு அடகு வைத்துள்ளது. 

ஒன்று  இவ்வாறு நீங்கள் அதரவு  அளிப்பது என்றால் அமைசர் பதவி எடுத்து எமது மக்களுக்கு எதையாவது செய்திருக்க வேண்டும் அதுவும் செய்யவில்லை அரசுக்கு வால் பிடித்து ஒன்றுமே நடக்கவில்லை, இந்த ஜனாதிபதி மைத்திரி வெற்றி பெற செய்யவேண்டும் என்று மக்களது வாக்குகளை பெற்று  ஏமாற்றி உள்ளதுதான் மிச்சம்.

வடக்கில் இராணுவ முகாம் அகற்ற படவில்லை, பொருளாதரத்தில் முனேற்றம் இல்லை, இன்று பார்த்தால் இலங்கை பொருளாதரத்தில் வீழ்ச்சி கண்டுள்ளதாக உலக நாடுகளே பேசுகின்றன.

வடக்கு, கிழக்கு இணைந்ததாக இருக்க வேண்டும், இதற்கு முஸ்லிம் மக்களும், முஸ்லிம் தலைவர்களும்  ஒத்துழைக்க வேண்டும். அத்தோடு இந்த அரசியல் சாசனத்தை எதிர்க்கின்றோம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் சிலர் இதை எதிர்க்கின்றனர்,  ஹிஸ்புல்லா,  ரிசாட் போன்ற அமைச்சர்கள் எதிர்த்துள்ளனர்,  ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரித்துள்ளது அது ஏன் என்று விளங்கவில்லை" என்று தெரிவித்தார்.