களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளில் எதிர்வரும் 10ஆம் திகதி காலை 9.00 மணி முதல் மாலை 6 மணி வரையிலான 9 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Image result for நீர் வெட்டு virakesari

அதனடிப்படையில், பயாகலை, மக்கொனை, பேருவளை, களுவாமோதரை, மொரகொல்ல, அளுத்கம, தர்காநகர மற்றும் பெந்தோட்டை ஆகிய இடங்களில் நீர் விநியோகம் தடைப்படுமென நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய திருத்தப் பணிகள் காரணமாக குறித்த இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் குறித்த சபை தெரிவித்துள்ளது.