இன்றைய திகதியில் மக்களுக்கு தங்களின் ஆரோக்கியத்தின் மேலுள்ள அதீத அக்கறை மற்றும் விழிப்புணர்வால் லேசாக நெஞ்சில் வலி வந்தாலும் உடனடியாக இது மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறியாக இருக்குமோ..! என்று அச்சம் கொள்கிறார்கள். உடனடியாக மருத்துவர்களை சந்தித்து ஆலோசிக்கிறார்கள். அவர்களும் கொரனரி ஓஞ்சியோகிராம் பரிசோதனையை செய்து கொள்ள பரிந்துரைக்கிறார்.

இந்த கொரனரி ஓஞ்சியாகிராம் பரிசோதனையின் போது இதயத்திற்கு செல்லும் இரத்த நாளங்களில் இருக்கும் அடைப்புகள் பற்றிய விவரங்கள் தெரியவரும். இந்த பரிசோதனையின் முடிவுகளை வைத்து இதயத்திற்கு செல்லும் இரத்த நாளங்களில் அடைப்புகள் இருக்கிறதா?இல்லையா? என்பது துல்லியமாக தெரியவரும். ஆனால் எம்மாதிரியான சிகிச்சையை மேற்கொண்டால் குணமடையலாம் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள இன்வேசிங் ஓஞ்சியோகிராம் என்ற பரிசோதனை அவசியம். இந்த சோதனையின் முடிவுகளை வைத்து மருந்து மாத்திரைகளின் மூலம் குணப்படுத்த இயலுமா? அல்லது பலூன் சிகிச்சையின் மூலம் குணப்படுத்த இயலுமா? என்பதை மருத்துவர்கள் தீர்மானிக்கிறார்கள்.

டொக்டர் ஹயாஸ் அக்பர்

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்