அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையில் தேசிய ரீதியிலான உதைப்பந்தாட்டப் போட்டி நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பில் இடம்பெற்றது.

இதன் போது 16 வயது பிரிவினருக்கிடையிலான போட்டியில் கலந்து கொண்ட மன்னார் புனித லூசியா ம.வி பாடசாலை அணியினர் முதலிடத்தை பெற்று சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் 18 வயது பிரிவினருக்கிடையிலான போட்டியில் கலந்து கொண்ட மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை அணியின் 3 ஆம் இடத்தை பெற்றுள்ளனர்.

குறித்த வெற்றிகளை பெற்று மன்னார் மாவட்டத்திற்கு பெருமையை தேடித்தந்துள்ள அணியினருக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்ளுவதாக இலங்கை உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவர் ஞானப்பிரகாசம் டேவிட்சன் (ஜெறாட்) தெரிவித்துள்ளார்.