ஐ.தே.க.வின் அங்கத்தவர்களுக்கு இன்று விளக்கமளிப்பு.!

Published By: Robert

07 Oct, 2017 | 08:57 AM
image

உள்­ளூராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்­தலை நடத்­த­ுவ­தற்­கான பூர்­வாங்க நட­வ­டிக்­கை­களில் தேர்­தல்கள் ஆணைக்­குழு மும்­மு­ர­மாக ஈடு­பட்­டுள்­ளது. 

இந்­நி­லையில் மாவட்ட ரீதி­யி­லான பிரதி மற்றும் உதவி தேர்­தல்கள் ஆணை­யா­ளர்­க­ளுக்­கான மூன்று நாள் செய­ல­மர்வு ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ள­தோடு ஐக்­கிய தேசியக் கட்­சியின் அங்­கத்­த­வர்­க­ளுக்கு விளக்­க­ம­ளிக்கும் கருத்­த­ரங்கும் இன்­றைய தினம் தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் கேட்போர் கூடத்தில் நடை­பெ­ற­வுள்­ளது. 

தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் மேல­திக ஆணை­யாளர் எம்.எம்.முஹமட் இவ்­வி­டயம் தொடர்பில் மேலும் தெரி­விக்­கையில், எதிர்­வரும் ஜன­வரி மாதத்­திற்குள் உள்­ளூராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்தல் நடத்தப்­ப­ட­வுள்­ளதால் அதற்­கு­ரிய பூர்­வாங்க பணி­களை ஆணைக்­குழு முன்­னெ­டுத்­துள்­ளது. 

உள்­ளூராட்சி மன்­றங்கள் தொடர்பில் அண்­மையில் நிறை­வேற்­றப்­பட்ட திருத்­தச்­சட்டம் உள்­ள­டங்­க­லான விட­யங்­களை அர­சியல் கட்­சி­க­ளுக்கு தெளிவுபடுத்தும் செயற்­றிட்டம் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது. 

ஏற்­க­னவே ஹெல உறு­மய மற்றும் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி ஆகி­ய­வற்­றுக்­கான தெளிவு­ப­டுத்தும் கருத்­த­ரங்­குகள் நிறை­வ­டைந்­துள்ள நிலையில் இன்­றை­ய­தினம் ஐக்­கிய தேசியக் கட்­சியின் அங்­கத்­த­வர்­க­ளுக்­கான கருத்­த­ரங்கு ஆணைக்­கு­ழுவின் கேட்போர் கூடத்தில் நடை­பெ­ற­வுள்­ளது. 

இதே­வேளை மாவட்ட ரீதி­யி­லான பிரதி மற்றும் உதவி ஆணை­யா­ளர்கள் வர­வ­ழைக்­கப்­பட்டு நேற்று வெள்ளிக்­கி­ழமை முதல் மூன்று நாள் விசேட செய­ல­மர்­வொன்றும் நடை­பெ­று­கின்­றது. இதில் உள்­ளூராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்தல் சட்­டத்தில் ஏற்­பட்­டுள்ள புதிய மாற்­றங்கள், வேட்பு மனு ஏற்­றுக்­கொள்ளல், வாக்குச் சாவ­டி­களை கையா­ளுதல், வாக்­கெண்ணும் நிலை­யங்­களை கையா­ளுதல், உள்­ளிட்ட தேர்தல் பணிகள் தொடர்­பாக விளக்­க­ம­ளிக்­கப்­ப­ட­வுள்­ளது. ஒவ்­வொரு தேர்தல் மாவட்­டத்திலும் உள்ள வாக்­குச்­சா­வ­டிகள், வாக்­கெண்ணும் நிலை­யங்கள் தொடர்­பான தக­வல்கள் மீள்­ப­ரி­சீ­லனை செய்­யப்­படும் செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தோடு 

மேல­தி­க­மாக தேவை­யா­ன­வி­டத்து வெளிக்­க­ளப்­ப­ரி­சீ­ல­னைகள் ஊடாக தெரிவு செய்­வ­தற்­கு­ரிய பணி­களும் தேர்­தல்கள் ஆணை­யக அலு­வ­லர்­களால் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளன. 

மேலும் தேர்தல் பணி­களில் ஈடு­படும் அலு­வ­லர்கள் தொடர்­பான தக­வல்கள் திரட்­டப்­பட்டு ஈ-ஸ­்டாபிங் நிகழ்ச்­சித்­ திட்­டத்தின் ஊடாக கணணி மயப்­ப­டுத்­தப்­படும் செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. அத்­துடன் க.பொ.த.சாதா­ரண தர பரீட்சை பணி­க­ளிலும் விடைத்தாள் திருத்தும் பணி­யிலும் ஆசி­ரி­யர்கள் ஈடு­ப­ட­வுள்­ள­மை­யினால் அவர்­க­ளுக்­கான தெளி­வு­ப­டுத்தும் நிகழ்ச்சித் திட்டம் எதிர்­வரும் 20ஆம் திகதி மாவட்ட அலு­வ­ல­கங்­களில் முன்­னெ­டுப்­ப­தற்­குரிய நட­வ­டிக்­கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:25:16
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01