வரவு - செலவு திட்டத்திற்கு முன் புதிய கணக்காய்வு சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் : ஜனாதிபதி

Published By: Priyatharshan

07 Oct, 2017 | 07:06 AM
image

வரவு - செலவு திட்டத்திற்கு  முன்னர் புதிய கணக்காய்வு சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கபடுவது உறுதியென ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். 

ஸ்ரீலங்கா சுதந்திர  கட்சி மறுசீரமைப்பை துரிதப்படுத்தவும் உறுப்பினர்களுக்கு வலியுறுத்தியுள்ளார். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இடையிலான வாராந்த சந்திப்பு நேற்று முன்தினம் இரவு ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. 

இந்த சந்திப்பின் போதே இக்கருத்துக்கள் பரிமாற்றப்பட்டுள்ளன. சந்திப்பு தொடர்பில் மேலும் தெரிய வருவதானது, 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும், தேர்தலுக்கு முன்னர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினை புதுப்பிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும் சந்திப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

இதற்கான  கட்சியின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கடைசியின் புதிய தகுதியான உறுப்பினர்களை நியமிக்க கட்சியின் மத்தியகுழு நடவடிக்கைகளை முன்னெடுத்துவரும் நிலையில் ஜனாதிபதியுடன் விரைவில் வேட்பாளர்கள் சந்திப்புகளும் இடம்பெறவுள்ளன . 

மேலும்  தேசிய கணக்காய்வு சட்டமூலத்தை விரைவில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கவும் இந்த சந்திப்பில் ஜனாதிபதி  தீர்மானித்துள்ளார்.  அரச மோசடிகளை தவிர்ப்பதற்காக புதிய தேசிய கணக்காய்வு சட்டமூலம் ஒன்றை கொண்டுவருவதாக  அரசாங்கம் தேர்தல் காலத்தில் வாக்குறுதி வழங்கியிருந்த போதிலும் இரண்டு ஆண்டுகளாகியும் கணக்காய்வு சட்டமூலம் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்படவில்லை என்ற குற்றச்சாடு தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டுவருகின்றது. 

இந் நிலையில் இந்த சந்திப்பின்போது கணக்காய்வு சட்டமூலத்தை கொண்டுவரவேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். ஆகவே இந்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் பாராளும்னதில் சமர்ப்பிக்க முன்னர் கணக்காய்வு சட்டமூலம் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  அடுத்தவாரம் அமைச்சரவையில் அங்கீகாரம் பெறப்பட்ட பின்னர் இம்மாத  பாராளுமன்ற அமர்வில் பாராளுமன்றத்தில் சட்டமூலம் முன்வைக்கப்பட வேண்டும் எனவும் எவவாறு இருப்பினும் வரவு செலவு திட்டத்திற்கு முன்னர் தேசிய கணக்காய்வு சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50
news-image

யாழ்.மாவட்ட கட்டளை தளபதியை சந்தித்த இந்திய...

2024-03-28 21:36:16
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48