80,000 புகலிடக்கோரிக்கையாளர்களை நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கு சுவீடன் அரசாங்கம் தீர்மானம்

Published By: Robert

29 Jan, 2016 | 10:17 AM
image

சுவீ­ட­னுக்கு கடந்த வருடம் வந்து புக­லிடக் கோரிக்கை நிரா­க­ரிக்­கப்­பட்ட 80,000 குடி­யேற்­ற­வா­சி­களை நாட்­டி­லி­ருந்து வெளியேற்ற தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக அந்­நாட்டு உள்துறை அமைச்சர் அன்டர்ஸ் யகெமான் தெரி­வித்தார்.

எனினும் மேற்­படி குடி­யேற்­ற­வா­சி­களை வெளி­யேற்றும் செயற்­கி­ரமம் பல வரு­ட காலத்தை எடுத்துக் கொள்­ளலாம் என அவர் கூறினார்.

கடந்த வருடம் சுவீ­டனில் புக­லிடம் கோரி சுமார் 163,000 பேர் விண்­ணப்­பித்­தி­ருந்­தனர். மேற்­படி புக­லிடம் கோரி விண்­ணப்­பிப்­ப­வர்கள் தொகை இந்த வருடம் சுவீடன் எல்லைக் கட்­டுப்­பா­டு­களை பலப்­ப­டுத்­தி­ய­தை­ய­டுத்து வீழ்ச்சி கண்­டது.

கடந்த வரு­டத்தில் அந்­நாட்டில் 58,800 விண்­ணப்­பங்கள் பரி­சீ­ல­னைக்­குட்­ப­டுத்­தப்­பட்டு அவற்றில் 55 சத­வீ­த­மான விண்­ணப்­பங்கள் ஏற்றுக் கொள்­ளப்­பட்­டி­ருந்­தன.

ஐரோப்­பா­வுக்குள் சட்­ட­வி­ரோ­த­மாக விஜயம் செய்­ப­வர்­க­ளுக்­கான பிர­தான புக­லிட நாடு­க­ளாக ஜேர்­ம­னியும் சுவீ­டனும் விளங்கி வரு­கின்­றன.

மேற்­படி குடி­யேற்­ற­வா­சி­களில் அநேகர் உள்­நாட்டுப் போரால் பாதிக்­கப்­பட்ட சிரியா, ஈராக் மற்றும் ஆப்­கா­னிஸ்தான் ஆகிய நாடு­களைச் சேர்ந்­த­வர்­க­ளாவர்.

இந்­நி­லையில் டென்­மார்க்கில் தங்க அனு­ம­திக்­கப்­பட்­டுள்ள குடி­யேற்­ற­வா­சிகள் தொடர்பில் அன்டர்ஸ் யகெமான் விப­ரிக்­கையில், புக­லி­டம்­கோரி புதி­தாக விண்­ணப்­பித்­த­வர்­களில் எத்­தனை பேரை ஏற்றுக் கொள்­வது என்­பது குறித்து அதி­கா­ரி­களும் நீதி­மன்­றமும் தீர்­மா­னிக்­க­வுள்­ள­தாக கூறினார்.

அதே­ச­மயம் புக­லி­டக்­கோ­ரிக்கை நிரா­க­ரிக்­கப்­பட்­டுள்­ள­வர்­களை வெளி­யேற்றும் நட­வ­டிக்­கையை முன்­னெ­டுக்க பொலி­ஸா­ரையும் அதி­கா­ரி­க­ளையும் அர­சாங்கம் கோரி­யுள்­ள­தாக அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52