மிஸ்டர் பீன் கதா­பாத்­திரம் மூலம் உலக புகழ் பெற்ற இங்­கி­லாந்தின் பிர­பல ஹொலிவூட் நகைச்­சுவை நடி­க­ரான ரோவன் அட்­கின்சன் (60வயது), தனது மனைவி சுனேத்ரா சாஸ்­தி­ரியை விவா­க­ரத்து செய்­துள்ளார். இதன் மூலம் இவர்­க­ளது 24 ஆண்டு திரு­மண வாழ்க்கை முறிந்­துள்­ளது.

Mr.Bean

"மிஸ்டர்.பீன்" கதா பாத்­தி­ரத்தின் மூலம் சிறி­யவர் முதல் பெரி­யவர் வரை அனைவர் மன­திலும் நீங்கா இடம் பிடித்­தவர் ரோவன் அட்­கின்சன். இவர், பி.பி.சி தொலைக்­காட்­சியில் ஒப்­பனை கலை­ஞ­ராக பணி­பு­ரிந்து வந்த இந்­திய வம்­சா­வ­ளியைச் சேர்ந்த சுனேத்ரா சாஸ்­திரி என்­ப­வரை கடந்த 1990ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் திரு­மணம் செய்து கொண்டார். இவர்­க­ளுக்கு லில்லி என்ற மகளும், பெஞ்­சமின் என்று ஒரு மகனும் உள்­ளனர்.

இந்­நி­லையில், கடந்த ஆண்டு (2014) பெப்­ர­வரி மாதம் விவா­க­ரத்து கேட்டு இங்­கி­லாந்தின் சென்ட்­ரலில் உள்ள குடும்­ப­நல நீதி­மன்­றத்தில் மனுத் தாக்கல் செய்தார் ரோவன். ஒன்­றரை ஆண்­டு­க­ளாக நடந்து வந்த இவ் வழக்கில் இரு­வ­ருக்கும் நீதி­மன்றம் விவா­க­ரத்து வழங்­கி­யுள்­ளது .
இந்த தம்­ப­தி­யி­னரின் விவா­க­ரத்­துக்கு 32 வய­து­டைய லூயிஸ் ஃபோர்ட் என்ற இளம்பெண்ணுடன் ரோவனுக்கு ஏற்பட்டுள்ள காதலே காரணம் என்று கூறப்படுகிறது.