Big Bad Wolf Books புத்தக விற்பனையின் அங்குரார்ப்பண நிகழ்வில் இலங்கை கல்வியமைச்சரான  அகில விராஜ் காரியவசம் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்துள்ளதுடன் Big Bad Wolf Books இன் ஸ்தாபகரும் முகாமைத்துவப் பணிப்பாளருமான அன்ட்ரூ யாப் இணை ஸ்தாபகரான ஜாக்குலின் நேக் மற்றும் ProRead Lanka (Pvt) Ltd நிறுவனத்தின் பணிப்பாளரான நிஷான் வாசலதந்திரி ஆகியோரும் நிகழ்வில் சமூகமளித்திருந்தனர்.

 இலங்கையில் இடம்பெறவுள்ள மாபெரும் புத்தக விற்பனை நிகழ்வான Big Bad Wolf Books புத்தக விற்பனை எதிர்வரும்  2017 ஒக்டோபர் 5 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் (SLECC) இடம்பெறவுள்ளதுடன் இலங்கையில் அனைத்து வாசகர்களுக்கும் புதியதொரு பரிமாணத்தைச் சேர்ப்பிக்கவுள்ளது. 

இந்நிகழ்வின் உத்தியோகபூர்வ தொலைதொடர்பாடல் பங்காளராக மொபிடெல் நிறுவனமும், உத்தியோகபூர்வ உணவு, பான வகை மற்றும் ஐஸ்கிறீம் பங்காளராக Keells Krest மற்றும் Elephant House ஆகிய நிறுவனங்கள் இணைந்துள்ளன.

தொடர்ந்து 11 நாட்களுக்கு இடைவிடாது கொள்வனவு செய்யும் வாய்ப்பினை புத்தக ஆர்வலர்களுக்கு வழங்கி, தினசரி 24 மணி நேரமும் விற்பனை இடம்பெறவுள்ளமை Big Bad Wolf Books புத்தக விற்பனை நிகழ்வின் சிறப்பம்சமாகும். அதாவது புத்தக விற்பனை ஆரம்பிக்கப்படும் தருணம் முதல் 255 மணித்தியாலங்களுக்கு அது தொடர்ந்தும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அனைத்து வயது மட்டங்களையும் சார்ந்த புத்தக ஆர்வலர்கள் நேரக்கட்டுப்பாடு தொடர்பில் எவ்விதமான கவலைகளுமின்றி தமது உள்ளங்களுக்குப் பிடித்தமான புத்தகங்களை தங்குதடையின்றி கொள்வனவு செய்யும் வாய்ப்பினைப் பெற்றுக்கொள்ளவுள்ளனர்.

பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படவுள்ள புத்தம்புதிய, உயர் தர ஆங்கில மொழிப் புத்தகங்களுக்கு 60 வீதம் முதல் 80 வீதம் வரையான பாரிய தள்ளுபடிகள் உட்பட பல்வேறுபட்ட வியப்பூட்டும் சலுகைகள் இந்த மாபெரும் புத்தக விற்பனை நிகழ்வின் மூலமாகக் கிடைக்கவுள்ளன. சிறந்த புத்தகங்களை கட்டுபடியான விலைகளில் வழங்கி, பொதுமக்கள் மிகச் சிறந்த விலைகளில் புத்தகங்களை கொள்வனவு செய்வதற்கு இடமளிப்பதே இந்த புத்தக விற்பனை நிகழ்வு இத்தகைய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமைக்கான காரணமாகும். 

வாசகர் வீதத்தை அதிகரித்து, புத்தகங்களின் பெறுமதி தொடர்பான விழிப்புணர்வை மேம்படுத்தி, இலங்கை மக்கள் மத்தியில் ஆங்கில அறிவுத்திறமையை வளர்ப்பதற்கும் இந்நிகழ்வு பங்களிப்பாற்றும். பல்வேறுபட்ட புத்தகங்கள் மற்றும் பெறுமதிமிக்க சேகரிப்புப் பொருட்கள் அனைத்தும் இந்த விற்பனை நிகழ்வின் மூலமாக ஒரே கூரையின் கீழ் கிடைக்கவுள்ளதுடன் அசைக்க முடியாத விலைகளில் அவற்றைப் பெற்றுக்கொள்ள முடியும். சுயசரிதைகள், நாவல்கள், புனை கதை அல்லாத மற்றும் புனைகதைகள், இலக்கியம், கோப்பி மேசைப் புத்தகங்கள், சமையல் புத்தகங்கள், புதிதாக பெற்றோர் ஆனவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உகந்த அனைத்து வயது சிறுவர்களுக்கான நூல்கள் மற்றும் பல்வேறு வகைப்பட்ட புத்தகங்கள் என 20,000 இற்கும் மேற்பட்ட ஆங்கில தலைப்புக்களை உள்ளடக்கியவாறு 1.5 மில்லியனுக்கும் அதிகமான புத்தகங்கள் இதன் மூலமாக விற்பனை செய்யப்படவுள்ளன. மட்டுப்படுத்தப்பட்ட பதிப்புக்கள் மற்றும் அரிதான புத்தக வகைகளை சேகரிப்போருக்கும் மிகப் பொருத்தமான ஒரு வாய்ப்பாக இந்த விற்பனை நிகழ்வு அமையவுள்ளதுடன், உள்நாட்டு புத்தகக் கடைகள், டிவிடி (DVD) மற்றும் Blu-Ray பட விற்பனை மையங்களுக்கான இட வசதியும் இங்கு ஏற்பாடு செய்யப்படவுள்ளது.

முதலாவது Big Bad Wolf Books புத்தக விற்பனை நிகழ்வானது 2009 ஆண்டில் மலேசியாவின் செலாங்கூர் நகரிலுள்ள டாதரன் ஹமோடாலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மிகவும் வெற்றிகரமாக இடம்பெற்ற இந்நிகழ்வைத் தொடர்ந்து, விற்பனை கணிசமான அளவில் அதிகரித்ததுடன், இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து போன்ற அண்டை நாடுகளுக்கும் இது விஸ்தரிக்கப்பட்டது. இந்த மாபெரும் புத்தக விற்பனை நிகழ்வை நடாத்தும் நான்காவது நாடாக தற்போது இலங்கை மாறியுள்ளது.

https://www.bigbadwolfbooks.com/lk/register/english  என்ற இணையத்தளத்தின் மூலமாக Big Bad Wolf Books புத்தக விற்பனை உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு விஜயம் செய்து, Wolf Pack உறுப்புரிமையைப் பெற்றுக்கொள்ள பதிவுசெய்வதன் மூலமாக, பார்வையாளர்கள் புத்தக விற்பனை நிகழ்வில் பிரத்தியேகமான அங்கத்துவ சலுகைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.