வவுனியாவில் ஆசிரியருக்கெதிராக துண்டுப்பிரசுரம் மூலம் பரப்புரை செய்த இரு மாணவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியாவிலுள்ள பிரபல ஆண்கள் பாடசாலையில் கல்வி பயிலும் சாந்தசோலை, தாண்டிக்குளம் பகுதியினைச் சேர்ந்த 17 வயதுடைய இரு மாணவர்கள் அப் பாடசாலை ஆசிரியரை தகாத வார்த்தைகள் மற்றும் சித்திரிக்கப்பட்ட அந்தரங்க புகைப்படங்களை துண்டுப்பிரசுரத்தில் பிரசுரித்து வவுனியா நகர் முழுவதும் நேற்று மாலை வேளையில் பிரசுரித்துக் கொண்டிருந்த போதே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மாணவர்களை விசாரணை செய்த போது தனிப்பட்ட கோபத்தினாலேயே மாணவர்கள் குறித்த வேலையை செய்ததாக ஒப்புக்கொண்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட இரு மாணவர்களையும் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஒப்படைக்க பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.