இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐக்கிய இராச்சியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் விவகாரங்களுக்கான அமைச்சர் மார்க் ஃபீல்ட் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை இன்று காலை சந்தித்துள்ளார்.

இச் சந்திப்பின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தாங்கள் நீண்ட நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டும் எதுவித தீர்ப்பும் தங்களுக்கு கிடைக்கவில்லை எனவும் தாங்கள் எதிர்நோக்கும் இன்னல்கள் பற்றியும் அவரிடம் எடுத்து கூறினர்.