கிரிக்கெட் வர­லாற்றில் முதன்முறை­யாக இலங்கை அணி பக­லி­ரவு டெஸ்ட் போட்­டியில் விளை­யா­ட­வுள்­ளது.

தற்­போது ஐக்­கிய அரபு எமி­ரேட்ஸில் பாகிஸ்­தா­னு­ட­னான இரண்டு போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணி தற்­போது விளை­யாடி வரு­கி­றது. 

இதில் அபு­தா­பியில் நடை­பெற்ற முதல் டெஸ்ட் போட்­டியில் பாகிஸ்­தானை குறைந்த வெற்றி இலக்­கையும் எடுக்க விடாமல் நசுக்­கிய இலங்கை பந்து வீச்­சாளர் ரங்­கன ஹேரத், உல­கி­லேயே முதன்முத­லாக 400 விக்­கெட்­டுக்கள் மைல்­கல்லை எட்­டிய இடது கை சுழற்­பந்து வீச்சாளர் என்ற சாத­னையைப் படைக்க முதல் டெஸ்ட் போட்­டியில் இலங்கை அணி அபா­ர­மான வெற்­றியைப் பதி­வு­செய்­தது.

இந்­நி­லையில் இவ்­விரு அணி­களும் மோதும் இரண்­ டா­வதும் கடை­சி­யு­மான டெஸ்ட்போட்டி இன்று பக­லி­ரவு போட்­டி­யாக நடை­பெ­ற­வுள்­ளது.

இலங்கை அணி முதன் முத­லாக பக­லி­ரவு டெஸ்ட் போட்­டியில் விளை­யா­ட­வுள்­ளதால் இலங்கை கிரிக்­கெட்­டிற்கு இது வர­லாற்று முக்­கி­யத்­துவம் மிக்க போட்­டி­யாக அமை­ய­வுள்­ளது.

மேலும் முதல் போட்­டி யில் வெற்­றி­பெற்­றதன் மூலம் அபு­தா­பியில் பாகிஸ்­தானை வீழ்த்­திய முதல் அணி இலங்கை என்ற பெரு­மை­யையும் இலங்கை அணி பெற்­றது.

138 வருட கிரிக்கெட் வர­லாற்றில் முதன்­மு­றை­யாக பக­லி­ரவு டெஸ்ட் போட்­டியில் அவுஸ்­தி­ரே­லிய – -நியூஸி லாந்து அணிகள் விளை­யா­டி­யி­ருந்­தன. 

2015ஆம் ஆண்டு நடை­பெற்ற இந்தப் போட்­டியில் பிங்க் நிற பந்து பயன்­ப­டுத்­தப்­பட்­டது. இப்போட்­டியை 47,441 ரசி­கர்கள் நேரில் கண்­டு­க­ளித்­தனர். 

பிங்க் நிற பந்தில் முதல் விக்­கெட்டை கைப்­பற்­றி­யவர் என்ற பெரு­மையை ஆஸி.யின் ஹசல்வுட் பெற்றார். வர­லாற்று சிறப்பு மிக்க இந்த டெஸ்ட் போட்டி ஆஸி.யின் அடி­லெய்டு மைதா­னத்தில் இரு அணிகள் இடை­யே­யான 3 போட்­டிகள் கொண்ட தொடரின் கடைசி ஆட்­ட­மாக நடை­பெற்­றது. 

அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் – இங்­கி­லாந்து, மேற்­கிந்­தியத் தீவுகள் – இங்­கி­லாந்து ஆகிய அணிகள் பக­லி­ரவு டெஸ்ட் போட்­டியில் மோதி­யி­ருந்­தன.

இதன் தொடர்ச்­சி­யாக இலங்கை அணி தற்­போது பக­லி­ரவு டெஸ்ட் போட்­டியில் களம் காண்­கி­றது. பாகிஸ்தான் அணி பக­லி­ரவு டெஸ்ட் போட்­டியில் விளை­யா­டி­யுள்­ளதால் பிங்க் நிற பந்து குறித்த அனு­பவம் அவர்­க­ளுக்கு நிறை­யவே இருக்கும்.

ஆனால் இலங்கை அணி முதன்­மு­றை­யாக பிங்க் நிற பந்தில் விளை­யா­ட­வுள்­ளது.

பாகிஸ்­தா­னுக்கு எதி­ரான இரண்டு போட்­டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1–0 என முன்­னிலை வகிக்கும் இலங்கை அணி இந்தப் போட்­டி­யிலும் வெற்­றி­பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் உள்ளது.

அத்தோடு இலங்கை அணியின் துருப்புச் சீட்டாக உள்ள ரங்கன ஹேரத் இந்தப் போட்டி யிலும் தனது மந்திரச் சுழலில் பாகிஸ்தானை திணறடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டுபாயில் இன்று நடை­பெ­ற­வுள்ள இரண்­டா­வது டெஸ்ட் போட்டி இலங்கை நேரப்­படி மாலை 3.30 மணிக்கு ஆரம்­ப­மா­க­வுள்­ளது. இலங்கை அணியைப் பொறுத்­த­வ­ரையில் வெற்றித் தெம்பில் இருக்­கி­றது. அதனால் இந்தப் போட்­டியில் புது நம்­பிக்­கை­யுடன் கள­மி­றங்கும்.

ஆனால் அபு­தா­பியில் முதன்முறை­யாக தோற்­றுள்ள பாகிஸ்தான் அணியோ இரண்­டா­வது போட்­டியில் வெற்­றி­பெற்று தொடரை சம­நி­லையில் முடிக்கும் முனைப்போடு களமிறங்கும். பொறுத் திருந்து பார்ப்போம் ஐந்தாம் நாளில் போட்டி யார் பக்கம் திரும்புகின்றது என்று.