மத்­திய வங்­கியின் பிணை முறி விநி­யோ­கத்தின் போது இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் மோச­டிகள் தொடர்பில் ஆராய நிய­மிக்­கப்­பட்ட ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்குழு, அடுத்த வாரத்­துக்குள் சாட்சிப் பதி­வு­களை முடி­வு­றுத்த தீர்­மா­னித்­துள்­ளது. 

எதிர்­வரும் 13 ஆம் திக­தி­யுடன் நிறை­வுக்கு வரும் வாரத்­துக்குள் சாட்சிப் பதி­வு­களை நிறைவு செய்ய தாம் எதிர்­பார்ப்­ப­தாக  பிணை முறி விநி­யோகம் தொடர்பில் விசா­ரணை செய்யும் ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்குழு­வுக்கு  தலைமை தாங்கும் நீதி­ய­ரசர் கே.டி. சித்­ர­சிறி தெரி­வித்தார்.

குறித்த ஆணைக்குழு முன்­னி­லையில் முக்­கி­ய­மான பல சாட்­சி­யங்கள் உள்­ளிட்ட பல சாட்­சி­யங்கள் பதிவு செய்­யப்­பட்­டுள்ள நிலையில், சாட்சிப் பதி­வுகள் இறுதிக் கட்­டத்தை அடைந்­துள்­ளன. இந் நிலையில் தற்­போது  முன்னாள் மத்­திய வங்கி ஆளுநர் அர்­ஜுன மகேந்­தி­ர­னிடம்  ஆணைக்குழு விசா­ர­ணைகள் இடம்­பெற்று வரு­கின்­றன. இந் நிலை­யி­லேயே அடுத்து வரும் ஒரு வாரத்­துக்குள் சாட்சிப் பதி­வு­களை நிறைவு செய்ய எதிர்­பார்ப்­ப­தாக ஆணைக்குழுவின் தலை வர் நீதி­யரசர் சித்­ர­சிறி தெரி­வித்தார்.

சாட்சிப் பதி­வுகள் நிறை­வுற்ற பின்னர், ஜனா­தி­ப­திக்கு சமர்ப்­பிக்க வேண்­டிய அறிக்கை தயார்செய்யும் பணிகள் ஆரம்­பிக்கப்படும் எனவும் அதற்கான கால அவ­காசம் தமக்கு தேவைப்படும் என வும் இதன்போது அவர் சுட்­டிக்­காட்­டினார்.

உயர் நீதி­மன்ற நீதி­யரசர் கே.டி.சித்­ர­சி­றியின் தலை­மையில்  நீதி­ய­ரசர் பிர­சன்ன ஜய­வர்­தன மற்றும் ஓய்­வு­பெற்ற பிரதி  கணக்­காய்­வாளர் நாயகம் வேலுப்பிள்ளை கந்தசாமி ஆகியோர் முன்னி லையில் இந்த விசாரணைகள் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.