கொழும்பு, அளுத்மாவத்தை பகுதியின் ஹெட்டியாவத்தை சந்தியிலிருந்து இப்பகேவத்தை சந்தி வரையான ஒரு பகுதியில் போக்குவரத்து தற்காலிகமாக மட்டுப்படுத்தப்பட்டவுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். 

நீர்க் குழாய் சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்த பகுதியில் இடம்பெற்றுவருவதால் இவ்வீதியூடான போக்குவரத்துக்கு தற்காலிகமாக மட்டுப்படுத்தப்படவுள்ளது.

அதன்படி நாளை 6 ஆம் திகதி முதல் எதிர்வரும் 9 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரையான நேரப்பகுதியில் குறித்த வீதியூடான போக்குவரத்துக்கு தற்காலிகமாக மட்டுப்படுத்தப்பட்டிருக்கும்.

இதனால் குறித்த வீதியை பயன்படுத்தும் வாகன சாரதிகளும் பொதுமக்களும் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு போக்குவரத்துப் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்னர்.