(ஆர்.யசி)

தேர்தல் முறைமையில் மாற்றம் கொண்டுவருவதை எம்மால் ஏற்றுகொள்ள முடியாது. எனினும் சமஷ்டி நாட்டை அழிக்கும் என்ற தவறான கருத்தை போலவே விருப்பு வாக்கும் முறைமையும் பாதகமானது என பெரும்பான்மை சக்திகள் போராடுவதனால் அவர்களை எதிர்ப்பதை விடவும்  சாணக்கியமாக உரிமைகளை வென்றுகொள்ள வேண்டியுள்ளதாக அரசகரும மொழிகள் மற்றும் தேசிய கலந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். 

Image result for மனோ கணேசன் virakesari

சிறுபான்மையினரை இணைக்கும்  நிலத்தொடர்பு அற்ற தேர்தல் தொகுதிகளை அமைக்க முடியுமா.? அதற்கான சாத்தியங்கள் உள்ளனவா.? என்பது குறித்து ஆராய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். 

தேர்தல் திருத்தங்களும் இடைக்கால அறிக்கையும் தெளிவூட்டல் செயலமர்வு இன்று கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் இடம்பெற்றது.