தங்கம் தேடி ஏ.எஸ்.பி. லிய­ன­கேயின் நீச்­சல்­த­டாக மணல் இன்று அகற்­றப்­ப­டு­கி­றது 

Published By: Priyatharshan

29 Jan, 2016 | 10:06 AM
image

பிர­பல வர்த்­த­கர் ஏ.எஸ்.பி.லிய­ன­கேயின் பீகொக் மாளி­கையின் நீச்சல் தடா­கத்தில் நிரப்பப் பட்­டுள்ள மணல் இன்று அகற்றப்­ப­ட­வுள்­ளது.

ஏ.எஸ்.பி.லிய­ன­கேயின் நாவல பீகொக் மாளி­கையில் மண­லினால் நிரப்­பப்பட்­டுள்ள நீச்சல் தடா­கத்தில் தங்கம் உள்­ள­தாக கதைகள் உலா வரும் நிலையில் அது குறித்து அவர் பொலிஸ் மா அதி­ப­ரிடம் செய்த முறைப்­பாட்­டுக்கு அமை­வாக விசா­ரணை இடம்­பெறும் நிலை­யி­லேயே அதன் ஒரு அங்­க­மாக இந்த மணல் அகற்றப்­ப­ட­வுள்­ளது.

இது குறித்து விசா­ரணை செய்து வரும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவின் அதி­கா­ரி­களின் மேற்­பார்­வையில் இவ்­வாறு இந்த மணல் அகற்­றப்­ப­ட­வுள்­ளது.

ஏ.எஸ்.பி.லிய­ன­கேயின் முறைப்­பாட்­டுக்கு அமைய அவ­ரிடம் கடந்த இரு நாட்­க­ளுக்கு முன்னர் இரு மணி நேரம் விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்­டன. கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு இந்த விசா­ர­ணை­களை நடத்தி வாக்கு மூலம் ஒன்றினை பதிவு செய்­தது.

ஏ.எஸ்.பி.லிய­ன­கேயின் நாவல பீகொக் மாளி­கையில் மண­லினால் நிரப்பப்பட்­டுள்ள நீச்சல் தடா­கத்தில் தங்கம் உள்­ளதா என்­பது குறித்து எதிர்­வரும் முதலாம் திக­திக்கு முன்னர் தமக்கு அறிக்கை சமர்­ப்பிக்­கு­மாறு பொலிஸ் மா அதிபர் மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜய­சுந்­த­ர­வுக்கு உத்­த­ரவு பிறப்­பித்­துள்­ள­தை­ய­டுத்தே இது குறித்து விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்பட்­டுள்­ளன.

இந் நிலையில் குறித்த நீச்சல் தடா­கத்தில் உள்ள மணலை அகற்றுவதற்கான செலவினை ஏ.எஸ். பி.லியனகேயே ஏற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34