விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'மெர்சல்' படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில், புதிய சாதனை ஒன்றையும் படைத்திருக்கிறது.

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100 வது படமான 'மெர்சல்' வருகிற தீபாவளிக்கு ரிலீசாக இருக்கிறது. 

அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் நடிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி உலகளவில் புதிய சாதனையை படைத்திருந்தது என்பது நாம் அறிந்ததே. 

முதல் வாரத்திலேயே 20 லட்சம் பேரால் பார்க்கப்பட்டு இந்திய அளவில் புதிய சாதனையை படைந்திருந்த 'மெர்சல்' படத்தின் டீசர் தற்போது புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது. அதாவது கடந்த செப்டம்பர் 21 ஆம் திகதி வெளியாகிய 'மெர்சல்' டீசரை இதுவரை (312 மணிநேரங்களில்) 2 கோடியே 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்துள்ளனர். தென்னிந்திய சினிமாவில் இது ஒரு புதிய மைல்கல்லாக அமைகிறது. அதேபோல், 9 லட்சத்து 37 ஆயிரம் பேர் இந்த டீசரை லைக் செய்துள்ளனர். 

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நாளை 'மெர்சல்' படக்குழுவில் இருந்து விஜய் ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி காத்திருக்கிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.