வெளியாகியுள்ள ஐந்தாம் தர புலமைபரிசில் பரீட்சையில் நுவரெலியா மாவட்டத்தில் மஸ்கெலியா நல்லதண்ணிர் ஆரம்ப வித்தியாலய மாணவி சமூவேல் செல்வா, தயாவதி தம்பதிகளின் செல்வ புதல்வி ஹொஸ்னீ என்ஸலேக்கா 191 புள்ளிகளை பெற்று மாவட்டத்தில் முதலாமிடத்தை பெற்றுள்ளார்.

2017 ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைபரிசில் பரீட்சையில் நுவரெலியா மாவட்டத்தில் கூடிய புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்த இவர் நல்லதண்ணி மறே தோட்டம் வலதள பகுதியை சேர்ந்தவராவார்.

இதேவேளை, கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவனான அருள்ஞானம் நிதர்ஷன் 183 புள்ளிகளை பெற்று நுவரெலியா மாவட்டத்தில் இரண்டாமிடத்தை பெற்றுள்ளார்.

மேலும் அக்கரப்பத்தனை ஹோல்புறுக் ஆரம்ப பாடசாலை மாணவன் சிவஞானம் சுரேன் 183 புள்ளிகளை பெற்று நுவரெலியா மாவட்டத்தில் இரண்டாமிடத்தை பெற்றுள்ளமை குறிப்பிடதக்கது.