கூட்டு எதிரணியினர் நாளைய தினம் மேற்கொள்ளவிருந்த  ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. 

Image result for நாமல் ராஜபக்‌ஷ நீதிமன்றம்

இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் முன்பாக வீதியை மறித்தும் நீதிமன்ற வீதியை மறித்தும் ஹம்பாந்தோட்டை துறைமுக நுழைவாயிலை இடைமறித்தும் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கடுக்க கூடாதென அறிவித்தே இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ மற்றும் டீ.வீ.சானக  உள்ளிட்ட சிலரினால் நாளைய தினம் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட இருந்தது.

இந்நிலையில், பொலிஸார் நீதிமன்றத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கடைய இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

ஹம்பாந்தோட்டை மாகம்புர துறைமுகத்தினையும் மத்தளை விமான நிலையத்தினையும் இந்தியாவிற்கு விற்பனை செய்யும் முயற்சிக்கு எதிர்ப்பு வெளியிட்டே இந்த ஆர்ப்பாட்டம் நடந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.