எச்சரிக்கை : விலை குறைப்பை மேற்கொள்ளாவிட்டால் மக்கள் வீதியில் இறங்க வேண்டியேற்படும்.!

Published By: Robert

05 Oct, 2017 | 11:14 AM
image

சாதா­ரண குடும்­ப­மொன்றின்  மாதாந்த செல­விற்கு 17 ஆயிரம் ரூபாய் போது­மா­ன­தாக அர­சாங்கம் கூறு­கின்­றது. மாதம் 17 ஆயிரம் ரூபா­வுடன் மக்கள் வாழ முடி­யுமா? இதனை நீங்கள் ஏற்­றுக்­கொள்­கின்­றீர்­களா என மக்கள் விடு­தலை முன்­னணி கேள்வி எழுப்­பி­ய­துடன் விலை குறைப்பை விரைவில் மேற்­கொள்­ளா­விட்டால் மக்கள் வீதியில் இறங்கி போரா­டு­வதை தடுக்க முடி­யாது எனவும் எச்­ச­ரித்­துள்­ளது. 

Image result for சுனில் ஹந்துன்­னெத்தி

மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் வாராந்த செய்­தி­யாளர் சந்திப்பு நேற்று கட்சி தலைமை அலு­வ­ல­கத்தில் இடம்­பெற்ற நிலையில் சந்­திப்பில் கலந்­து­கொண்ட ஜே.வி.பி.யின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுனில் ஹந்துன்­னெத்தி இதனை தெரி­வித்தார். இது குறித்து அவர் மேலும் கூறு­கையில், அர­சாங்கம் நாட்டின் பொரு­ளா­தார கொள்­கையை சரி­யாக கையா­லாகாத நிலையில் அதற்­கான விளை­வு­களை மக்கள் அனு­ப­வித்து வரு­கின்­றனர். இன்று டொலர் பெறு­மதி வேக­மாக உயர்­வ­டைந்து வரு­கின்­றது. ஆட்­சி­யா­ளர்­களின் தவ­றினால், ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு சரி­யான ஆட்சி முறைமை தெரி­யாத கார­ணத்­தினால் மக்கள் கஷ்­டங்­களை அனு­ப­விக்க வேண்­டி­யுள்­ளது. இன்று விலை உயர்வு அதி­க­ரித்­துள்­ளது.

அடிப்­படை தேவைகள் அனைத்­தி­னதும்  விலை அதி­க­ரித்­துள்­ளது. இதனால் அன்­றாட வாழ்க்­கையை சாதா­ரண பணத்தில் அனு­ப­விக்கும் அதி­க­மான மக்கள் கஷ்­டப்­பட்டு வரு­கின்­றனர். விலை உயர்வை குறைக்­காது தேங்­காய்­க­ளுக்கு நிறம் பூசும் வேலை­யினை அர­சாங்கம் முன்­னெ­டுத்து வரு­கின்­றது. கடந்த ஆண்­டுடன் இந்த ஆண்டு பொருட்­களின் விலை­களை  ஒப்­பி­டு­கையில் இந்த ஆண்டு அத்­தி­யா­வ­சிய பொருட்­களின் விலை 36 வீதத்­தினால் உயர்­வ­டைந்­துள்­ளது. 

இவ்­வாறு அத்­தி­யா­வ­சிய பொருட்­களின் விலை உயர்வின் மூல­மாக மக்­களின் அன்­றாட கஷ்­டங்கள் ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு விளங்­க­வில்லை. கொழும்பு நுகர்வோர் அதி­கார சபையின் கணக்­கீட்டின் படி நான்­கு பேர் கொண்ட ஒரு குடும்­பத்­திற்கு  மாத­மொன்­றுக்கு  43 ஆயிரம் ரூபாய்  தேவைப்­ப­டு­கின்­ற­தெ­னவும்  கொழும்பில் நான்கு பேர் கொண்ட சாதா­ரண ஒரு குடும்­பத்தின் மாதாந்த செல­வாக 60 ஆயி­ரத்து 364  ரூபாய் செல­வா­கின்­ற­தா­கவும்  நுகர்வோர் அதி­கார சபை சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது.  எனினும் அமைச்சர் எஸ்.பி திசா­நா­யக அண்­மையில் பாரா­ளு­மன்­றத்தில் இது தொடர்பில் கூறு­கையில் சாதா­ர­ண­மாக நான்­குபேர் கொண்ட ஒரு குடும்­பத்­தி­ன­ருக்கு மாதாந்தம்  14 ஆயி­ரத்து 196 ரூபாய் செல­வா­வ­தா­கவும் 

கொழும்பில் நான்கு பேர் கொண்ட சாதா­ரண ஒரு குடும்­பத்தின்   செல­வாக  17 ஆயி­ரத்து 308 ரூபாய் இருப்­ப­தா­கவும் கூறினார். இந்த கணக்­கெ­டுப்பு முழு­மை­யாக தவ­றான வகையில் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது. நுகர்வோர் அதி­கா­ர­சபை தெளி­வாக அவர்­களின் மாதாந்த அறிக்­கையில் தெரி­வித்­துள்ள நிலையில் அர­சாங்கம் மக்­களை முழு­மை­யாக ஏமாற்றி வரு­கின்­றது. அர­சாங்கம் இந்த உண்­மை­களை ஏற்­றுக்­கொள்ள தயா­ராக இல்லை. 

அர­சாங்கம் முன்­வைத்­துள்ள கணக்­கின்­படி ஒரு மனிதன் எந்­த­வித செல­வு­களும் செய்­யாது, மருத்­து­வத்தை பெறாது வாழும் வாழ்க்­கைக்கு மாத்­தி­ரமே இந்த செலவு குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. ஒரு மனிதன் அவ்­வாறு வாழ முடி­யாது. இதுதான் மக்­க­ளுக்கு அர­சாங்கம் கூறும் பதி­லாக உள்­ளது. மக்­களை எந்த செயற்­பா­டு­க­ளுக்கும்  இட­ம­ளிக்­காத அர­சாங்கம் தத்­த­மது செல­வு­க­ளுக்­காக கோடிக் கணக்­கி­லான பணத்­தினை செல­வ­ழித்து வரு­கின்­றது. நாட்டில் 41 வீத­மான மக்கள் ஒரு நாளைக்கு 2 டொலர் வரு­மானம் பெறாது உள்­ளனர் என பிர­தமர் கடந்த 2015 ஆம் ஆண்டு பாரா­ளு­மன்­றத்தில் தெரி­வித்தார். 

ஆனால் இன்று இந்த அர­சாங்­கமும் முன்­னைய ஆட்­சி­யினை போலவே செயற்­பட்டு வரு­கின்­றது.  இந்த அர­சாங்கம் தூர­நோக்­குடன் செயற்­பட வேண்டும். ஆனால் இந்த அர­சாங்கம் தமது ஆட்­சியில் தமக்கு சாத­க­மாக எத­னையும் செய்­து­கொள்ள முடி­யுமா என்­ப­தையே பார்க்­கின்­றனர். வளங்­களை விற்­பதன் மூலமும், விலை அதி­க­ரிப்பின் மூலமும் அர­சாங்­கத்தை பலப்­ப­டுத்தி கொள்­ளவும்   வரி­களின் மூல­மாக மக்­களின் பணத்தை சுரண்­ட­வுமே கவனம் செலுத்தி வரு­கின்­றது. 

இன்று நாட்டில் மூன்று வேளை  உணவு உண்ணும் குடும்­பங்கள் குறை­வ­டைந்து வரு­கின்­றன. இரண்டு வேளை  உணவைப் பெறவே மக்கள் கஷ்­டப்­பட்டு வரு­கின்­றனர். ஆனால் இவற்றை அர­சாங்கம் கவ­னத்தில் கொள்­ள­வில்லை. 

மக்­க­ளி­டமும் இதே கேள்­வியை நாம் கேட்­கின்றோம், உங்­களால் 17 ஆயிரம் ரூபாவு டன் வாழ முடி­யுமா? இதனை நீங்கள் ஏற்­றுக்­கொள்­கின்­றீர்­களா என்­பதை கூறுங்கள், அடுத்த மாதம் வரவு செலவு திட்டம் முன்­வைக்­கப்­ப­ட­வுள்ள நிலையில் இப்­போது அதற்­கான வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றது. 

அர­சாங்­கத்தின் வேலைத்­திட்­டங்கள், தனிப்­பட்ட செல­வுகள், வெளி­நாட்டு விஜயம் என்­ப­வற்றை முன்­னெ­டுக்­கும்­போதும் அர­சாங்­கத்­திற்கு நிதி உள்­ளது, ஆனால் மக்­க­ளுக்­கான ஒரு வேலைத்­திட்­டத்தை முன்­னெ­டுக்க அவர்­களின் திறை­சே­ரியில் பணம் இல்­லாது போகின்­றது. 

விலை குறைப்­பு­களை மேற்­கொண்டு மக்­க­ளுக்கு சலு­கை­களை வழங்க முடி­யாது. புதி­தாக நான்கு விமா­னங்­களை வாங்­கவும், புதிய ஹோட்டல் அமைக்­கவும் அர­சாங்கம் கொடுக்கும் முக்­கி­யத்­துவம் மக்­களின் அன்­றாட வாழ்க்­கையை மேம்­ப­டுத்தும் செயற்பாட்டில் முன்னெடுக்கப்படவில்லை. கடந்த இரண்டு ஆண்­டு­களில் ஸ்ரீலங்கா விமா­ன­சே­வை­யினை நடத்த மத்­திய வங்­கியின் மூல­மாக திறை­சே­ரியில் இருந்து  நிதி­ பெறப்பட்டுள்ளது.

இதனை சாதா­ரண வியா­பா­ரி­க­ளுக்கு வழங்­கி­யி­ருந்தால் விவ­சா­யத்தில் பாரிய மாற்­றத்­தினை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்க முடியும். ஆனால் அமைச்­சர்­களின் தனிப்­பட்ட செல­வு­க­ளுக்கும் ஆடம்­பர  வாழ்க்­கைக்கும்  தாரா­ள­மாக நிதி ஒதுக்க முடி­கின்­றது. 

எதிர்­வரும் சில ஆண்­டு­களில் இலங்­கையில் பாரிய பொரு­ளா­தார நெருக்­க­டி­யினை எதிர்­கொள்ள நேரிடும். அதற்கு இப்­போது ஏற்­பட்­டுள்ள விமான சேவை­களின் வீழ்ச்சி, பாரிய பொரு­ளா­தார முத­லீ­டு­களின் வீழ்ச்­சியே கார­ண­மாகும். 

அநா­வ­சி­ய­மாக செய்­துள்ள முத­லீ­டுகள் மற்றும் தெளி­வில்­லாத பொரு­ளா­தார வேலைத்­திட்­டங்­களே இதற்கு கார­ண­மாகும். 

சாதா­ரண மக்­களின் மூல­மாக இந்த நிலைமை உரு­வா­க­வில்லை, வெள்ளை உடை­களை அணிந்­து­கொண்டு மக்கள் பிர­தி­நி­தி­க­ளாக பாரா­ளு­மன்­றத்தில் உள்­ள­வர்­களே இதற்கு கார­ண­மாகும். அவர்­களே இந்த நாட்­டினை நாச­மாக்­கி­யுள்­ளனர். இரண்டு இலட்­சத்­துக்கும் அதிகமான மக்கள் வேலை வாய்ப்பில்லாது போகும் நிலைமை இப்போது ஏற்பட்டு வருகின்றது. விரைவில் இந்த நிலைமைக்கு எமது மக்கள் முகங்கொடுக்க வேண்டிவரும். 

எனவே இப்போது அரசாங்கம் தெளிவான பொருளாதார கொள்கையினை கூறவேண்டும், தீர்வை அரசாங்கமே கூறவேண்டும், விலை குறைப்புக்களை செய்ய வேண்டும், தேசிய உற்பத்திகளை அதிகரிக்க வேண்டும், உள்நாட்டு முதலீடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.  இல்லையேல் நாட்டில் மக்கள் புரட்சி வெடிப்பதை தடுக்க முடியாது.   மக்களுடன் இணைந்து நாமும் வீதியில் இறங்கி போராடவேண்டிய நிலை உருவாகும். எமக்கும் மாற்று வழிமுறை இல்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:11:31
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59