இலங்­கையில் அதி­வேக ரயில் பாதை­களை அமைக்க முடி­யாதா.?

Published By: Priyatharshan

05 Oct, 2017 | 11:04 AM
image

அதி­வேக புகை­யி­ரத பாதைகள் வெளி­நா­டு­களில் காணப்­பட்­டாலும் இலங்­கையின் புகை­யி­ரத பாதை­க­ளை குறுக்­கிட்டு பல சிறிய வீதிகள் இருப்­ப­தனால் எமது நாட்டில் அதி­வேக புகை­யி­ரத பாதைகளை நிர்மாணிக்க முடி­யாது என போக்­கு­வ­ரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறி­பால டி சில்வா தெரி­வித்தார்.

கொழும்பு கோட்டை புகை­யி­ரத நிலை­யத்­திற்கு  நூறு வரு­டங்கள் பூர்த்­தி­யா­வ ­தனை முன்­னிட்டு கோட்டை புகை­யிரத நிலை­யத்­தில் அமைக்கப்பட்டுள்ள புதிய பய­ணச்­சீட்டு விநி­யோகத்தளம், பய­ணி­க­ளுக்­கான புதிய பாலம், பெஸ்­டியன் மாவத்­தையில் இருந்தான நுழை­வாயில் ஆகி­ய­வற்றை போக்­கு­வ­ரத்து மற்றும் சிவில் விமானத் துறை அமைச்சர் நிமல் சிறி­பால டி சில்வா திறந்து வைத்தார். மேலும் இதனை முன்­னிட்டு விசேட முத்­தி­ரை­யும் வெளி­யி­டப்­பட்­டது. இந்­நி­கழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். இந்த நிகழ்­விற்கு தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ ஹலீம் வருகை தந்­தி­ருந்தார். கொழும்பு கோட்டை புகை­யி­ரத நிலையத்­திற்கு நூறு வரு­டங்கள் பூர்த்­தி­யா­­வ­தனை முன்­னிட்டு தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீ­மினால் விசேட முத்­தி­ரையும் வெளி­யி­டப்­பட்­டது. 

போக்­கு­வ­ரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறி­பால டி சில்வா இங்கு உரை­யாற்­று­கையில், நாட்டின் புகை­யி­ரத சேவையை தர­மிக்­க­தாக மாற்ற முடி­யா­மைக்கு தொழிற்­சங்­கங்­க­ளுக்கு இடையில் காணப்­படும் அதி­கார போட்­டியே பிர­தான கார­ண­மாகும். இதனை தவிர்த்துக் கொண்டால் நிச்­ச­ய­மாக தர­மிக்க புகை­யி­ரத சேவையைமக்­க­ளுக்கு வழங்க முடியும். 

அத்­துடன் தற்­போது அனைத்து நாடுக­ளிலும் அதி­வேக புகை­யி­ரத சேவைகள்ஸ்தாபிக்­கப்­பட்டு வரு­கின்­றன. எனினும் இலங்­கையில் அதி­வேக புகை­யி­ரத பாதை­களை நிர்­மாணிக்க முடி­யாது. ஏனெனில் புகை­யி­ரத பாதையை குறுக்­கிட்டு பல சிறிய வீதிகள் காணப்­ப­டு­கின்­றன. ஆகவே இலங்­கையில் புகை­யி­ர­தங்­க­ளுக்கு அதி வேகமாக பய­ணிக்க முடி­யாது.

எனினும் வெளி­நா­டு­களில் காணப்படும் புதிய தொழில்­நுட்­பத்தை இலங்கைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்துள் ளோம். குறிப்பாக ஜி.பி.எஸ். முறைமையிலான சமிக்ஞை திட்டம், பயணச்சீட்டு களை இலத்திரனியல் முறைமையில் வழங்குதல் போன்ற காரியங்கள் முன்னெடுக்க முடியும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55