தாக்குதலுக்கு முன்னர் நடந்த சம்பவம் வெளியாகியது.!

Published By: Robert

05 Oct, 2017 | 11:30 AM
image

அமெ­ரிக்க லாஸ் வெகாஸ் நக­ரி­லுள்ள  மன்­டலே பே ஹோட்­ட­லி­லி­ருந்து  இசை நிகழ்ச்­சி­யொன்றைக் கண்­டு­க­ளிக்கக் கூடி­யி­ருந்­த­வர்கள் மீது துப்­பாக்கிச் சூட்டை நடத்தி 58  பேரை படு­கொலை செய்து 527 பேரைக் காயப்­ப­டுத்­திய துப்­பாக்­கி­தாரி, தாக்­கு­தலை நடத்­து­வ­தற்கு முன்னர் தான் தங்­கி­யி­ருந்த ஹோட்­டலைச் சுற்றி  பல புகைப்­ப­டக்­க­ரு­வி­களை  பொருத்­தி­யி­ருந்­தமை கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. 

இந்த தாக்­குதல் சம்­ப­வத்தில் 59  பேர் கொல்­லப்­பட்­டுள்­ள­தாக ஆரம்­பத்தில்  அறி ­வித்­தி­ருந்த பொலிஸார், அந்தத் தொகை யில்  தன்னைத் தானே சுட்டுத் தற்­கொலை செய்து கொண்ட தாக்­கு­தல்­தா­ரி­யான ஸ்டீ பன் பட்­டொக்கும் (64  வயது)  தவ­று­த­லாக உள்­ள­டக்­கப்­பட்டு விட்­டதால் அவரை  அந்தத் தொகை­யி­லி­ருந்து தற்­போது நீக்­கி­யுள்­ள­தாக  கூறு­கின்­றனர். 

இரு புகைப்­ப­டக்­க­ரு­விகள்  ஹோட்­ட லின் கூடத்­திலும்  ஒரு புகைப்­ப­டக்­க­ருவி அறைக் கத­வி­லுள்ள பார்ப்­ப­தற்­கான துவா­ரத்­திலும் பொருத்­தப்­பட்­டி­ருந்­தன. இதன்மூலம் சட்ட அமு­லாக்கல் உத்­தி­யோ­கத்­தர்கள் தான் தங்­கி­யி­ருந்த இடத்தை நோக்கி வரு­கி­றார்­களா  என அவரால் இருந்த இடத்­தி­லி­ருந்து கண்­கா­ணிக்க முடிந்­த­தாக தெரி­விக்­கப்­ப­டு­கிறது.

எனினும் அவர் எதற்­காக இந்தப் படு­கொ­லை­களை மேற்­கொண்டார் என்­பது தொடர்ந்து மர்­ம­மா­கவே உள்­ள­தாக பொலி ஸார் கூறு­கின்­றனர்.

இது முன்­கூட்­டியே  பரந்­த­ளவில் திட்­ட­மிட்டு மேற்­கொள்­ளப்­பட்ட படு­கொலை நட­வ­டிக்கை என பிராந்­திய பாது­காப்பு அதி­காரி ஜோசப் லொம்­பார்டோ தெரி­வித்தார்.

இந்­நி­லையில் தாக்­கு­தல்­தாரி  தான் தங்­கி­யி­ருந்த ஹோட்டல் அறையில் தன்னைத் தானே சுட்டு தற்­கொலை செய்து கொண்­டி­ருப்­பதை வெளிப்­ப­டுத்தும் புகைப்­ப­டங்கள் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன.

தாக்­கு­தல்­தா­ரியின்  சட­லத்­துக்கு அருகில் இரு துப்­பாக்­கிகள் காணப்­ப­டு­வ­துடன் அரு­கி­லி­ருந்த மேசையில் தற்­கொலைக் கடிதம்  போன்று தோன்றும் கட­தாசி துண்­ டொன்றும் காணப்­ப­டு­கி­றது. ஆனால் பொலிஸார் அது தொடர்பில் விமர்­சனம் எத­னையும் இது­வரை வெளி­யி­ட­வில்லை.

அதே­ச­மயம் பட்டொக் ஹோட்டல் அறை கண்­ணாடி ஜன்­னலை சேதப்­ப­டுத்­து­வ­தற்குப் பயன்­ப­டுத்­தி­ய­தாக நம்­பப்­படும் சுத்­தியல் அவ­ரது அறையின் தரையில் இருப்­பதை  மேற்­படி புகைப்­ப­டங்­களில் ஒன்று வெளிப்படுத்துகிறது.

பட்டொக் 9  நிமிடங்கள் முதல் 11  நிமி டங்கள் வரை சூட்டை நடத்தியதாக தெரி விக்கப்படுகிறது. ஆனால் பாதுகாப்புப்  படையினர் 72  நிமிடங்கள் கழித்தே அவர் தங்கியிருந்த அறையின் கதவை வெடி வைத்துத் தகர்த்து உள்ளே  பிரவேசித்துள் ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10