பிரத்­தி­யேக விஜ­ய­மொன்றை மேற்­கொண்டு இன்று வியா­ழக்­கி­ழமை ஜேர்மன் செல்லும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, திங்கட்­கி­ழமை பின்­லாந்து நோக்கி பய­ண­மா­கின்றார்.

பின்­லாந்­துக்­கான  உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தின்போது புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பாக ஆரா­ய­வுள்­ள­துடன், இரு நாடு­க­ளுக்­கி­டையில் வர்த்­தக மற்றும் பொரு­ளா­தார  தொடர்­பு­களை ஏற்­ப­டுத்­து­வது தொடர்பில் அந்­நாட்டு தலை­வர்­க­ளுடன் உயர்­மட்ட பேச்­சு­வார்த்­தையும் நடத்­த­வுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பிரத்­தி­யேக விஜ­ய­மொன்றை மேற்­கொண்டு இன்று வியா­ழக்­கி­ழமை ஜேர்மன் நாட்­டுக்கு பய­ணிக்­க­வுள்ளார். இதன்­படி ஜேர்மன், பர்லின் நக­ரிற்கு செல்­ல­வுள்ளார்.

அதன்­பின்னர் உத்­தி­யோ­க­பூர்வ விஜ­ய­மொன்றை மேற்­கொண்டு திங்கட்­கி­ழமை பின்­லாந்து பய­ணிக்­க­வுள்ளார். வர­லாற்றில் முதற்­த­ட­வை­யாக இலங்கை பிர­தமர் ஒருவர் அந­்நாட்­டுக்கு பய­ணிக்கும் சந்­தர்ப்பம் இது­வாகும்.

இந்த விஜ­யத்தின் போது வர்த்­தக, பொரு­ளா­தார, கைத்­தொழில் ஆகிய துறையில் புதிய தொடர்­பு­களை ஏற்­ப­டுத்திக் கொள்ளும் நோக்­குடன் பிர­தமர் தலை­மை­யி­லான குழு பின்­லாந்து நோக்கி பய­ணிக்­க­வுள்­ளது.

மேலும் அந்­நாட்டு அர­சி­ய­ல­மைப்பு தொடர்பில் ஆராய்ந்து அதன் அனு­ப­வங்­களை பெறு­வ­தற்­கான பேச்­சு­வார்த்­தை­க­ளிலும் பிர­தமர் கலந்து கொள்வார் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.

 பின்­லாந்து ஹெல்­சின்கி நகரில் வைத்து பின்­லாந்து பிர­தமர் யுஹா சிபிலர் உள்­ளிட்ட உயர் மட்ட தலை­வர்­க­ளுடன் பிர­தமர் தலை­மை­யி­லான குழு­வினர் இரு தரப்பு பேச்­சு­வார்த்­தை­க­ளையும் நடத்­த­வுள்­ளனர்.

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் பின்­லாந்து உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தின் போது பிர­த­மரின் பாரியார் மைத்­திரி விக்­கி­ர­ம­சிங்க, துறை­முக மற்றும் கப்­பற்­துறை அமைச்சர் மஹிந்த சம­ர­சிங்க, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரி­ய­வசம், பிர­த­மரின் செய­லாளர் சமன் ஏக்கநாயக்க, நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் ஆர்.எச்.எஸ் சமரதுங்க, அரசியலமைப்பு சபையின் மேலதிக செயலாளர் யுரேஷா பெர்னாண்டோ, பிரதமரின் மேலதிக செயலாளர் சமன் அத்தாவுதஹெட்டி ஆகியோர் பயணிக்கவுள்ளனர்.