பிரித்­தானிய அமைச்சர் இலங்கை வருகை

Published By: Robert

05 Oct, 2017 | 10:33 AM
image

இரண்டு நாள் உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தை மேற்­கொண்டு ஆசிய  மற்றும் பசுபிக் விவ­கா­ரங்­க­ளுக்­கான பிரித்­தா­னிய அமைச்சர் மார்க் பீல்ட் இன்று வியா­ழக்­கி­ழமை இலங்கை வரு­கின்றார். 

இவர் பிர­தான எதிர்க்­கட்­சி­யான தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பினை சந்­திக்­க­வுள்ளார். இச்­சந்­திப்பு கொழும்பில் உள்ள பிரித்­தா­னிய உயர்ஸ்­தா­னி­க­ராலயத்தில் இன்று நடை­பெ­ற­வுள்­ளது.  

வடக்­கிற்கு விஜயம் செய்யும் பிரித்­தானிய அமைச்சர் அங்கு பல­த­ரப்­பட்ட சந்­திப்­பு­களில் கலந்து கொள்ள உள்­ள­துடன் காணாமல் போன­வர்­களின் உற­வி­னர்­க­ளையும் சந்­தித்து கலந்­து­ரை­யாட வுள்ளார். 

பிரித்­தா­னி­யாவின் ஆசிய பசுபிக் விவ­கா­ரங்­க­ளுக்­கான அமைச்சர் மார்க் பீல்ட் இன்றும் நாளை வெள்ளிக்­கி­ழ­மையும் நாட்டில் தங்­கி­யி­ருப்பார். இந்த சந்­தர்ப்­பத்தில் அர­சாங்­கத்தின் உயர் மட்­டத்­தி­னரை சந்­தித்து கலந்­து­ரை­யாடவுள்ளார்.  

அதே­போன்று யாழ்ப்­பா­ணத்­திற்­கான விஜ­யத்தின் போது வட மாகாண முத­ல­மைச்சர் சி.விக்­னேஸ்­வ­ரனை சந்­தித்து கலந்­து­ரை­யாட உள்ளார்.  வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் குடும்­பத்­தி­ன­ரையும் சந்­தித்து நிலை­மை­களை அறி­ய­வுள்­ள­தாக குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. 

இதன்­போது வடக்கில் பிரித்­தா­னி­யாவின் உத­வி­யுடன் மேற்­கொள்­ளப்­படும் கண்­ணி­வெடி அகற்றும்  பணி­களை பார்­வை­யிட உள்­ள­துடன், மீள்­கு­டி­யேற்ற பகு­தி­க­ளுக்கு சென்று அந்த மக்­க­ளையும் சந்­திக்­க­வுள்ளார்.

நல்­லி­ணக்கம் மற்றும் ஜன­நா­ய­கத்தை வலுப்­ப­டுத்தும் இலங்­கையின் நட­வ­டிக்­கைகள் குறித்து பிரித்­தா­னிய அமைச்சர் தனது விஜ­யத்தில் கூடிய கவனம் செலுத்­தவுள்ளார்.

ஆசிய மற்றும் பசுபிக் விவ­கா­ரங்­க­ளுக்­கான வெளிவிவகாரப் பணியகத்தின்  அமைச்சராக நியமிக்கப்பட்ட பின்னர் அமைச்சர் மார்க் பீல்ட் இலங்கைக்கு விஜயம் செய்யும் முதலாவது சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44