கொழும்புக்கும் தமிழகத்தின் தூத்துக்குடிக்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவையை  மீண்டும் ஆரம்பிப்பதற்கு பொருத்தமான முதலீட்டாளர்களைத் தெரிவுசெய்ய விண்ணப்பங்களை கோர அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

துறைமுகங்கள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க இது குறித்து முன்வைத்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு  அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

அரசாங்க  தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்  கலந்துகொண்ட  அமைச்சர்  கயந்த கருணாதிலக்க  இதனைத் தெரிவித்தார்.