“நீ இருக்க ஒரு கருவறை இருந்தது என் வயிற்றில்” “ஆனால் நான் இருக்க ஒரு இருட்டறை கூட வா இல்லை உன் வீட்டில்” என்பது போல ஒரு மனம் நெகிழும் சம்பவம் மட்டக்களப்பில் இடம்பெறுள்ளது.

மட்டக்களப்பு பதுளை வீதியில் அமைந்திருக்கும் அயல் கிராமமான கித்துள் கிராமத்தில் பிள்ளைகளை விட்டு பிரிவதற்கு மனம் இல்லாமல் தவிக்கும் பெற்றோர்கள் தங்களது ஆதங்கத்தை இவ்வாறு தெரிவிக்கின்றனர்.

தங்களது இறுதிக்  காலத்திலாவது தாங்கள் பார்த்து பார்த்து வளர்த்த பிள்ளைகளுக்கு பக்கத்தில் இருந்து தங்களது இறுதிப் பயணம் அமையவேண்டும் என்று எதிபார்த்து  இருக்கும் போது பிள்ளைகள் தங்களை முதியோர் இல்லத்துக்கு அனுப்ப நினைப்பது வேதனை அழிப்பதாக தெரிவிக்கின்றனர்.

பத்து மாதம் சுமந்த தாய் தனக்கென்று வாழாத தந்தை இவர்களின் இந்த வாழ்க்கைப் போராட்டம் மிகவும் வேதனைக்குரிய விடயமாக உள்ளது.

நகர்ப் புறங்களில் பிள்ளைகளால் பெற்றோர்கள் கைவிடப்பட்ட பல சந்தர்ப்பங்கள் இருந்தும் கிராமப் புறங்களிலும்  இந்த வேதனையான சம்பவங்கள் தற்போது உருவாகி வருகின்றது.

இந்த தாய் தந்தையர்கள் தங்களது  வாழ்க்கையில் எதிர்பார்க்காத ஒரு விடயமாகவும் இவர்களை முதியோர் இல்லங்களில் சேர்ப்பதும் கஷ்டமான  விடயமாக இருக்கின்றது.

இது போன்ற சம்பவங்கள் இன்று உருவாகுவதற்கு வறுமையும் ஒரு காரணமாக அமைகின்றமை குறிப்பிடத்தக்கது.