சட்டவிரோதமாக நாட்டிற்குள் கடத்திவரப்பட்ட 17 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய சிகரட் தொகையுடன் சீன நாட்டு பெண் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த சிகரட் தொகை இன்று காலை 5.20 மணியளவில் கைப்பற்றப்பட்டதாக பிரதி சுங்கப் பணிப்பாளர் தெரிவித்தார்.

டுபாயில் இருந்து இந்த சிகரட் தொகையை சந்தேகநபர் கடத்திவந்துள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் கூறினார்.

சந்தேகத்தின் அடிப்படையில் சுங்கப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் இவை கைப்பற்றப்பட்டுள்ளன.

சிகரட் தொகை அரச உடைமையாக்கப்பட்டதுடன், 10 000 ரூபா அபராதம் விதிக்கப்பட்ட பின்னர் சந்தேகநபர் விடுவிக்கப்பட்டுள்ளார்.