இனவாதத்தை பரப்ப ஊடகங்கள் துணைபோகக் கூடாது என்கிறார் பிரதமர்

Published By: Raam

29 Jan, 2016 | 08:34 AM
image

அபே­ராம விஹா­ரையில் இடம்­பெற்ற இர­க­சி­யக் ­கூட்­டத்தில் கலந்­து­கொண்ட ஊட­க­வி­ய­லா­ளர்கள், தீட்­டப்­பட்ட சதிகள் என அனைத்தும் அறி­யக்­கி­டைத்­துள்­ளன. வேட்­டை­யாடும் விதத்தில் செயற்­பட்டு ஊட­கங்கள் இன­வா­தத்தை தூண்­டி­விட முற்­ப­டக்­கூ­டாது. ஊட­கங்கள் எந்த இடத்தில் இருந்து செயற்­பட வேண்டும் என்­பதை தீர்­மா­னித்துக் கொள்ள வேண்டும் என்று பிர­த மர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நேற்று சபையில் தெரிவித்தார்.

அர­சாங்­கத்தை வீழ்த்­தப்­போ­வ­தா­க கூறும் சிலர், எப்­போது விழும் என்றும் எதிர்­பார்த்­தி­ருக்­கின்­றனர். அது ஒரு போதும் நடக்காது. அதற்­காக நான் ஒன்றும் செய்­ய வும் முடி­யாது என்றும் அவர் கூறினார்.

இதே­வேளை நாம் புத்தங்

சரணங்கச்­சாமி என்றே கூறினோம். ஆனால் மஹிந்த சரணங் கச்­சாமி என்று கூறி­ய­வர்கள் பௌத்­தத்தைப் பற்றிப் பேசு­வ­தற்கு அரு­க­தை­யற்­ற­வர்கள். நாம் மக்­களின் பலத்தைக் கொண்ட அர­சாங்­க­மாக இருக்­கிறோம். தற்­போது விசா­ர­ணைகள் இடம்­பெற்று வரு­கின்­றன.

இன்னும் இரண்டு வாரங்­களில் நாட்டில் சில விட­யங்­களை எதிர்­பார்க்க முடியும் என்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கூறினார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை அமர்வின் போது அனு­ர­கு­மார திசா­நா­யக எம்.பி.யினால் கொண்டு வரப்­பட்ட பொலிஸ் தொடர்­பான சபை ஒத்­தி­வைப்பு பிரே­ரணை மீதான விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

பிர­தமர் ரணில் இங்கு தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

பொலிஸார் தொடர்பில் இலங்­கையில் மட்­டு­மல்ல உலகம் முழு­வ­தி­லுமே பிரச்­சி­னைகள் இருந்து வரு­கின்­றன. எனினும் ஆசி­யா­வி­லேயே சிறப்­புத்­தன்மை வாய்ந்து காணப்­பட்ட இலங்கைப் பொலிஸ் துறையை மஹிந்த ரெஜிமன்ட் சீர­ழித்து விட்­டது.

ஒரு நாட்டின் சட்­டத்தை நிலை நாட்­டு­வ­தானால் அது பொலிஸ் ஊடகம் மற்றும்ீநீதி்­துறை ஆகிய முத்­த­ரப்­புக்­களின் இணைந்த செயற்­பாட்டின் அடிப்­ப­டை­யி­லேயே சாத்­தியம்.

நாட்டில் சட்­டத்தை பொலி­ஸா­ரினால் மாத்­திரம் நிலை நிறுத்­து­விட முடி­யாது. பொலிஸ் துறையை இல்­லாது செய்­தது போன்றே நீதித்­துறை மற்றும் ஊட­கத்­துறை ஆகி­ய­வற்­றையும் மஹிந்த ரெஜிமன்ட் இல்­லாது செய்து விட்­டது.

இன்று ஊட­கங்கள் இன­வா­தத்தை பரப்­பு­வ­தற்கு செயற்­பட்டு வரு­கின்­றன. ஆங்­கில – சிங்­கள ஊட­கங்கள் இன­வா­தத்­துக்கு துணை­போ­கின்­றன. ஊட­க­வி­ய­லா­ளர்கள் பலர் இன­வா­தி­க­ளாக செயற்­பட்டு ஊட­கங்­களைப் பயன்­ப­டுத்தி வரு­கின்­றனர்.

எம்­பி­லிப்­பிட்­டிய சம்­பவம் தொடர்பில் பேசு­கின்ற , எழு­துகின்ற ஊட­கங்கள் “ஹோமா­கம சம்­பவம் பற்றி பேசு­கின்­ற­னவா, எழு­து­கின்­ற­னவா? எந்­த­வொரு ஆசி­ரிய தலை­யங்­கமும் ஹோமா­கம சம்­பவத் தொடர்பில் எழு­தி­யுள்­ளதா?

ஊட­க­வி­ய­லா­ளரை வெள்ளை வேனில் கடத்­து­வ­தற்கு குறித்த ஊட­கத்தின் ஆசி­ரி­யரே செயற்­பட்­டி­ருந்­தமை எமக்கு தெரி­யாமல் இல்லை. ஊட­க­வி­ய­லா­ளர்கள் தமது கை சுத்­த­மாக இருந்தால் நீதி­மன்றம் செல்­லுங்கள். உங்­க­ளுக்­காக நான் வரு­கிறேன்.

இன்று இலத்­தி­ர­னியல் ஊட­கங்கள் அனைத்­துமே இன­வா­தத்தை தூண்டி செயற்­பட்டு வரு­கின்­றன. ஊட­கங்கள் வேட்­டை­யாடும் செயற்­பா­டு­களில் செயற்­பட்டு இன­வா­தத்­துக்கு துணை­போகக் கூடாது. ஊட­கங்கள் எந்த இடத்தில் நின்று செயற்­பட வேண்டும் என்­பதை தீர்­மா­னித்துக் கொள்ள வேண்டும்.

எமது அர­சாங்கம் எப்­போது விழும் என்று சிலர் எதிர்­பார்த்துக் காத்­தி­ருக்­கின்­றனர். அர­சாங்­கத்தை வீழ்த்தி விடலாம் என்று சிலர் எண்ணி செயற்­ப­டு­கின்­றனர். மக்கள் பலம் கொண்ட அர­சாங்கம் ஒரு­போதும் வீழ்ந்து விடாது என்­ப­தையும் வீழ்த்­தி­வி­ட­மு­டி­யாது என்­ப­தையும் தெரி­வித்துக் கொள்­கிறேன்.

இதே­வேளை அபே­ராம விஹா­ரையில் நேற்று (நேற்று முன்­தினம்) இர­க­சி­யக்­கூட்டம் ஒன்று இடம்­பெற்­றுள்­ளது. இதில் மஹிந்த ஆத­ரவு ஊட­க­வி­ய­லா­ளர்­களும் கலந்து கொண்­டுள்­ளனர். இங்கு கலந்து கொண்­ட­வர்கள், பேசப்­பட்ட விடயம் என அனைத்தும் நாம் அறிவோம். இயன்­றதைச் செய்து கொள்­ளுங்கள். 100 பேரை போராட்­டத்­துக்கு அழைத்­து­வந்தால் நான் 1000 பேரை இறக்கிக் காட்­டுவேன். 1000 பேரைக் கொண்டு வந்தால் நான் பத்­தா­யிரம் பேரை இறக்கிக் காட்­டுவேன். அர­சாங்­கத்­திடம் பலம் இல்லை என்றோ, எதுவும் செய்­ய­மு­டி­யாது என்றோ எண்ண வேண்டாம். அனைத்தையும் அடக்குவதற்கு செயற்படுவோம்.

தற்போது விசாரணைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இன்னும் இரண்டு வாரங்களில் நல்ல பெறுபேறுகளைக் காண முடியும்.

பௌத்தர்கள் என்ற வகையில் நாம் புத்தங் சரணங் கச்சாமி என்றும் சங்கங் கரணங் கச்சாமி என்றுமே கூறினோம். எனினும் மஹிந்த சரணங் கச்சாமி என்று கூறியவர்கள் இன்று பௌத்தம் பற்றி பேசுவதற்கு அருகதையற்றவர்கள் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25